>> Monday, October 12, 2009

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் விஜயம்

இலங்கை வந்துள்ள தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அங்கு சமூகசேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அரச அதிகாரிகள் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருமே இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து விடுவித்து, அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும் என ஒரு முகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.

இலங்கையின் வடகடலில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களும் தொழில் செய்வதில் ஏற்பட்டுள்ள நீண்டகால பிரச்சினை குறித்தும் இந்தச் சந்திப்பின்போது மீனவர் சங்க பிரதிநிதிகள் சார்பில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு யாழ் பல்லைக்கழகத்தில் இணைந்துள்ள மாணவர்களும் தமது பிரச்சினைகள் குறி்த்து தமிழக தூதுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்கள்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


இலங்கை தென் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கூட்டணி அமோக வெற்றி


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலொன்றில் ஆளும் அரசாங்க கூட்டணி பெற்றுள்ள மாபெரும் வெற்றி, அங்கு விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய அரசுக்கு சிறந்த முன்னோடி நடவடிக்கை என பெரும்பாலான அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சொந்த பிரதேசமான தென் மாகாணசபைக்கான தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணி மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

நாட்டில் தனது அரசியல் பலத்தை கட்டியெழுப்பும் வெளிப்படையான உத்தியாக, பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தத்தில் சிக்கியிருந்த வடக்கு மாகாண சபை தவிர்ந்த ஏனைய எட்டு மாகாண சபைகளுக்கான தேர்தலையும் அரசாங்கம் கட்டங்கட்டமாக நடத்திமுடித்துள்ளது.

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் வெற்றி கொண்டதன் பின்னணியில் தென்னிலங்கையில் மகிந்த ராஜபக்ஸவுக்கு அதிகரித்துள்ள பிரபலத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றுமொரு பெரும் தேர்தல் வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளது.

அவரது கூட்டணி 68 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் பின்னால் தள்ளப்பட்டு 25 வீதமான வாக்குகளையும் தென் மாகாணத்தை கோட்டையாக கருதும் தீவிர தேசியவாத இடதுசாரி்யான மக்கள் விடுதலை முன்னணி 6 வீதமான வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளன.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்பு என்ற சுயாதீன தேர்தல் கண்காணிப்பு குழுவொன்று, வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட விதி மீறல்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான சம்பவங்களை ஆதாரங்காட்டி இந்த தேர்தலை முன்னெப்போதுமில்லாதளவுக்கு மிக மோசமானது என்று வர்ணித்துள்ளது.

இந்த தேர்தல் வெற்றியையடுத்து, மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை இனி அவசரமாக விடுக்கலாம் என பலரும் நம்புகின்றனர். இந்த அறிவிப்பு அடுத்த மாதத்திலிருந்து எவ்வேளையிலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

ஆனால் தேர்தல் நாளன்று கருத்து தெரிவித்த அவர் ‘எனது பதவிக் காலத்தில் இன்னும் இரண்டு வருடங்கள் எஞ்சியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் அடுத்த ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டே ஆக வேண்டியுள்ளது.



--------------------------------------------------------------------------------


ஆஸ்திரேலியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது


இந்தோனேசியா

ஆஸ்திரேலியாவுக்குள் கப்பல் மூலம் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் இருநூற்று அறுபது இலங்கையர்களை தடுத்துவைத்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடியேறிகள் போன்று தென்படுபவர்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்று ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் இடைமறிக்கப்பட்டதாக இந்தோனீசிய கடற்படைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குடியேற்றத்துறை அலுவலகத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter