>> Tuesday, October 13, 2009

இந்தியாவில் மாவோயியவாதிகள் அழைப்பின் பேரில் வேலைநிறுத்தம்

இந்தியாவின் ஜார்கண்ட் மற்றும் பிஹார் மாநிலங்களில் மாவோயியக் கிளர்ச்சியாளர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில் அம்மாநிலங்களில் பரவலான வன்முறை சம்பவங்கள் நடந்தாகச் செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் டில்லியில் பிரதமர் மன்மோஹன் சிங்கை சந்தித்த மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மாவோயியத் தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய அரசு தொடர்ந்து இணை ராணுவத்தினரை அண்டை மாநிலமான ஜார்க்கண்டிற்கு அனுப்பவேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இந்தியா மாவோயிய தீவிரவாதிகளை ஒடுக்க பாரிய போலிஸ் நடவடிக்கை ஒன்றை எடுக்க தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வரும் நிலையில், இந்த பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமே தவிர ராணுவ ரீதியான தீர்வுக்கு முயலக்கூடாது என்று அருந்ததி ராய் போன்ற பல சிந்தனையாளர்கள் கோரியிருக்கிறார்கள்.

மாவோயியவாதிகளை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க நடவடிக்கை குறித்த மார்க்ஸிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு பற்றி அக்கட்சியின் தேசிய மத்தியக்குழு உறுப்பினர் உ.ரா.வரதராஜன் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


மருத்துவக் கல்வி ஆராய்ச்சிக்கு சடலங்கள் தானம் வழங்கப்படுவதை ஊக்குவிக்க சென்னையில் புதிய திட்டம்


மருத்துவ கல்லூரி மாணவர்களின் கல்விக்கு சடலங்கள் தேவைப்படுகின்றன
மனிதர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல்களை மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்குவதை ஊக்குவிக்கும் வகையிலான திட்டம் ஒன்று சென்னை மருத்துவ கல்லூரியில் துவங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், அறுவை சிகிச்சை செய்து பழகுவதற்கு இந்த சடலங்கள் பெரிதும் பயன்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒருவர் இறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கப்பட்டால்தான் அச்சடலம் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படும். ஆனால் இந்தியாவில் இறுதிச் சடங்குகள் ஒருவர் இறந்த பின்னர் நாட்கணக்கில் நடப்பதால், சடலங்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படாமல் போய்விடுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஆராய்ச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட சடலங்கள் துண்டுகளாக்கப்படும் என்று நினைத்து உறவினர்கள் அவற்றை கொடுக்க முன்வருவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து சென்னை மருத்துவ கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மோஹனசுந்தரம் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


--------------------------------------------------------------------------------


பதினாறு வயது பள்ளித் தலைமை ஆசிரியர்


பாபர் அலியின் பள்ளியில் 800 மாணவர்கள் வரை படிக்கின்றனர்
இந்தியாவின் மேற்குவங்கத்தில் பாபர் அலி என்னும் 16 வயது பள்ளி மாணவர் தனது பகுதியில் பள்ளிசெல்ல வழியில்லாத நூற்றுக்கணக்கான சிறார்களுக்கு கல்வி வழங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

முர்ஷிதாபாத்தில் தான் பள்ளிக்கூடம் சென்று கற்றுக்கொண்ட விஷயங்களை மாலை நேரங்களில் தனது வீட்டின் பின்புறத்தில் பள்ளி செல்லாத ஏழை மாணவர்களுக்கு அவர் சொல்லித்தருகிறார்.

இந்த முறைசாரா பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரும் பாபர் அலிதான்.

கல்விப் பசி குறித்த பிபிசியின் தொடரில் முதலாவதாக ஒலிபரப்பாகும் பாபர் அலி பற்றிய விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை


மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்





^^ மேலே செல்க

முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை

BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>

உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter