>> Wednesday, August 12, 2009
உதவி
எழுத்து மட்டும்
தமிழோசையை எனது தொடக்கப் பக்கமாக்குக
முகப்பு
நினைவில்நின்றவை
வானிலை
------------
வானொலி
நிகழ்ச்சி நிரல்
அலைவரிசை
------------
சேவைகள்
எம்மைத் தொடர்புகொள்ள
எம்மைப் பற்றி
RSS என்றால் என்ன?
------------
பிறமொழிகள்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 12 ஆகஸ்ட், 2009 - பிரசுர நேரம் 13:26 ஜிஎம்டி
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
செய்தியரங்கம்
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது
தமிழோசை
பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியாவில் மேலும் பலர் பலி
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய்கிழமை குஜராத் மாநிலம் வதோதரா நகரில் ஏழு வயதுப் பெண் குழந்தையும், மகாராஷ்டிர மாநிலத்தில் 63 வயது மூதாட்டி ஒருவரும், 13 வயதுப் பெண் குழந்தையும் உயிரிழந்ததை அடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இதுவரை, இந்தியா முழுவதும் சுமார் ஆயிரம் பேர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிப்பேர், புனே நகரில் உள்ளனர்.
இது தொடர்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது, மத்திய அரசின் அதிகாரிகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட உள்ளதாகவும், அவர்களுடன் உடனடியாக ஆலோசனை நடத்துமாறும் முதலமைச்சர்களிடம் குலாம் நபி ஆசாத் கேட்டுக் கொண்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினையைக் கையாள்வதில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்பது குறித்து மத்திய அரசின் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையிலும் ஆலோசனைக் கூட்டம்
இதனிடையே சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
பரிசோதனை, சிகிச்சை, மருந்துகள் உள்பட அனைத்து ஏற்பாடுகள் தொடர்பாகவும் அப்போது விவாதிக்கப்பட்டது. தற்போது பன்றிக் காய்ச்சல் பரிசோதனை வசதி சென்னை மட்டும் வேலூரில் மட்டுமே உள்ளது. அதை, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நோய் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், பள்ளிகளில் மாணவர்களை விழிப்புடன் கவனிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகார பகிர்வு ஏற்படாவிட்டால் மீண்டும் வன்முறை தலைதூக்கும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க எச்சரிக்கை
ராபர்ட் ஒ பிளேக்
இலங்கையில் போர் முடிவடைந்துள்ள நிலையில், சிறுப்பான்மை இனமான தமிழர்களுடன், அதிகார பகிர்வு ஏற்படுத்த இலங்கை அரசு தவறினால், நாட்டில் வன்முறைகள் மிண்டும் புதிதாக வெடிக்கலாம் என்று அமெரிக்க அரசின் மூத்த இராஜதந்திரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
அரசாங்க நிர்வாகத்திலுள்ல முகாம்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள், மேலும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஏ பி செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிடும் போது தெற்காசியாவுக்கான துணை இராஜாங்க அமைச்சர் ராபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.
முகாம்களில் தமிழ் மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு எதிராக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பிளேக் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இலங்கை அரசு கருத்து வெளியிடும் போது, தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் விடுதலைப் புலிகள் அடையாளம் காணப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமது வீடுகளுக்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மாணவர்கள் பரீட்சைகளை எழுதியுள்ளனர்
வவுனியா முகாம் ஒன்றுஇலங்கையின் தேசிய மட்டத்தில் மிகவும் முக்கிய பரீட்சையாகக் கருதப்படுகின்ற கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கு யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இடம்பெயர்ந்துள்ள 1253 மாணவர்கள் தோற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்தப் பரீட்சை இன்று நாடாளவிய ரீதியில் ஆரம்பமாகியிருக்கின்றது. இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள, விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் எனக் கூறப்படுகின்ற 166 பேர் இந்தப் பரீட்சைக்கு வவுனியாவில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களிலேயே பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் 5 இடைத்தங்கல் முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்களில் அங்குள்ள 66 இடம்பெயர்ந்த மாணவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இதேவேளை இந்தப் பரீட்சைக்கு நாடாளவிய ரீதியில் 1827 நிலையங்களில் மொத்தமாக 2 லட்சத்து 42 ஆயிரத்து 91 மாணவர்கள் தோற்றுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.
வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தமது பாடசாலைகளை இடைத்தங்கல் முகாம்கள் அமைப்பதற்காக விட்டுக்கொடுத்த பாடசாலைகள் உட்பட இந்த மாவட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த 1624 மாணவர்கள் இந்தப் பரீட்சையை எழுதுகின்றார்கள்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்
0 comments:
Post a Comment