bbc
>> Wednesday, August 5, 2009
மூதூர் படுகொலைகளுக்கு அனைத்துலக விசாரணை தேவை - ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்இலங்கையின் வடகிழக்கு பகுதியில், பிரெஞ்சு நிவாரண உதவி அமைப்பின் ஊழியர்கள் 17 பேர் மூன்று ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதை தொடர்ந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க அரசாங்க விசாரணைகள் தவறியிருப்பதால் அனைத்துலக விசாரணை ஒன்று இது குறித்து நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது.
பிரான்ஸின் ஏ சி எஃப் எனப்படும் உதவி அமைப்பின் உள்ளூர் ஊழியர்கள் கொல்லப்பட்டமை பற்றிய விசாரணையை அரசாங்கம் கையாண்ட விதமே, ஒட்டுமொத்தமாக தவறானது என்று குறிப்பிட்டுள்ள அந்த மனித உரிமைகள் அமைப்பு சர்வதேச விசாரணை ஒன்று அத்தியாவசியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டில் இந்த கொலைச் சம்பவங்கள் நடந்த சமயத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்திருந்த சமாதான கண்காணிப்பாளர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போது "இக்கொலைகளில் அரசாங்க இராணுவத்தினர் சம்பந்தப்பட்டிருந்ததாக தாம் கருதுவதாக குறிப்பிட்டார்கள்".
ஆனாலும் அரசாங்க நடத்திய விசாரனையோ இக்கொலைகளுக்கு இராணுவம் பொறுப்பல்ல என்று கூறியுள்ளது.
இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மீண்டும் தமிழகத்தின் நிவாரணப் பொருட்கள்
இடம்பெயர்ந்த மக்களின் இருப்பிடங்கள்இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கென தமிழக அரசு திரட்டியுள்ள நிவாரணப்பொருட்கள் நான்காவது தவணையாக இலங்கைக்கு அனுப்பப்படவிருக்கிறது.
சுமார் 15 கோடி மதிப்புள்ள அப்பொருட்கள் ஏற்றப்பட்ட எம்.சி.பி.ஆம்ஸ்டர்டாம் என்ற கப்பல் வியாழக்கிழமை சென்னைத்துறைமுகத்திலிருந்து புறப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் வீர ஷண்முகமணி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இப்பொருட்களை கொழும்பில் இறக்குவதற்குத் தேவையான அனுமதி இலங்கை அரசிடமிருந்து வராத சூழலில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய 100 சரக்குப் பெட்டகங்கள் சென்னை துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக சென்னைத் துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக சில பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.
நிவாரணப்பொருட்களை விநியோகிப்பது யார் என்ற சிக்கலின் காரணமாகவே தாமதமேற்பட்டதாகவும், இப்பொறுப்பு இப்போது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து ஐக்கிய நாடுகள் அவையின் மேற்பார்வைக்கு மாற்றப்பட்டுவிட்டதால் அச்சிக்கலும் தீர்க்கப்பட்டுவிட்டது.எனவே கப்பலில் சரக்குக்கள் ஏற்றப்பட்டு கொழும்பிற்கு அனுப்பப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறினர்.
இலங்கையில் போர் உக்கிரமடைந்த நேரத்தில் இடம் பெயர்ந்தோருக்காக நிவாரணப்பொருட்கள் திரட்டப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 13 தொடங்கி இதுவரை மூன்று தவணைகளாக 23.52 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன்.
இப்போது அனுப்பிவைக்கப்படும் பொருட்கள் ஆகஸ்ட் 8 ஆம் நாள் கொழும்பு சென்றடையும் என்றும், பிறகு அவற்றை அங்குள்ள இந்தியத் தூதரகம் பெற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்க்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பும் கூறுகிறது.
இந்தியாவிலும் பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி
இந்திய விமான நிலையத்தில் பன்றிக் காய்ச்சல் முன்னெச்சரிக்கைஇந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில், எச்1என்1 என்று அழைக்கப்படும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 வயதுப் பள்ளி மாணவி ஒருவர் திங்கட்கிழமை உயிரிழந்தார். இந்தியாவில், பன்றிக்காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல் முறை.
இதையடுத்து, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரை மருத்துவமனைகள் கையாள்வது தொடர்பாக இந்தியாவின் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, அவசியம் என்று கருதும் வரை, அந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ரீடா ஷேக் என்ற அந்த மாணவி, ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகிறார். ஜூலை 27-ம் தேதி, காய்ச்சல் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது ரத்தம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு இன்னொரு தனியார் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டதாகவும் அப்போது பன்றி்க்காய்ச்சல் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பிறகு, தேசிய தொற்றுநோய் மையத்தில் நடத்திய இரண்டாவது பரிசோதனையின்போதுதான் அவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்பிறகுதான், அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகுதான், ரீடா ஷேக்கிற்கு, டாமிஃப்ளூ மருந்து கொடுக்கப்பட்டதாக அவரது குடும்பததினர் கூறுகிறார்கள். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.
ஆனால், மருத்துவமனையின் அலட்சிப் போக்கினால்தான் தங்கள் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக, ரீடா ஷேக்கின் பெற்றோர் புகார் கூறுகிறார்கள். அதற்காக, அந்த மருத்துவமனை மீது வழக்குத் தொடர இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் ரத்தப் பரிசோதனையை ஆரம்பத்திலேயே அரசு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பாமல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், குறிப்பிட்ட பரிசோதனைக்கு 24 மணி நேரம் தேவைப்படும் நிலையில், அந்த தனியார் மருத்துவமனையிலிருந்து ஒரு மணி நேரத்தில் பரிசோதனை முடிவு வெளிவந்தது எப்படி என்றும் அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
ஆனால், குறிப்பிட்ட மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாத் மொக்லிகர், ரீடா ஷேக்கின் பெற்றோர் கூறும் புகார்களை மறுத்துள்ளார்.
இந்தியச் சிறார்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி
இந்தியச் சிறார்கள்இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி வழங்குவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா செவ்வாய்க் கிழமை நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலு்ககுப் பிறகு இந்தச் சட்டம், நடைமுறைக்கு வரும்.
புதிய சட்டத்தின்படி, 6 முதல் 14 வயதுக்கு உள்பட்ட
0 comments:
Post a Comment