bbc

>> Tuesday, August 4, 2009

இடம்பெயர்ந்த யாழ்குடாநாட்டு மக்களை மீளக் குடியமர்த்த முதற்கட்ட நடவடிக்கை- சமூக சேவைகள் அமைச்சு
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள,யாழ் குடா நாட்டைச் சேர்ந்த சுமார் நாற்பதினாயிரம் மக்களில் ஒரு தொகுதியினர் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவர்களை சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக சமூக சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக யாழ் மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 141 குடும்பங்கள் தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பப்படவுள்ளன.
இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
தற்போது சவுதிப் பெண்களும் வீட்டுப் பணியாளர்களாக..
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிவது என்பது எவரும் பார்த்து பொறாமைப் படக்கூடியதொன்றல்ல.சவுதி வீசா அனுசரனை நடைமுறைகளின் படி அவர்கள் தமது கடவுச்சீட்டினை வேலை வழங்குனரிடம் ஒப்படைக்க வேண்டும்.
நாளொன்றுக்கு 20 மணித்தியாலங்கள் வரை அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட முடியும்.வீட்டு உரிமையாளர்ளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் இந்த வீட்டுப்பணிப்பெண்கள் உள்ளாக்கப்படக்கூடும்.
அவர்களின் சம்பளங்கள் வழமையில் ஊதிய ஆவணங்களில் பதியப்படுவதுமில்லை.இவர்கள் சட்ட ரீதியாக வேலையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமானால் கூட அவர்களிடம் எந்த விதமான ஆவணங்களும் இல்லாத காரணத்தால் அதுவும் சாத்தியமில்லை.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து தப்பியோடி தத்தமது நாட்டு தூதரகங்களில் தஞ்சமடைகின்றனர்.கடந்த வருடம் அறிக்கையொன்றை வெளியிட்ட ஹியுமன் ரைட்ஸ் வொச் அமைப்பு, சவுதி ஆரேபியாவிலுள்ள வீட்டுப் பணியாட்கள் நடத்தப்படுகின்ற விதம் அடிமைத் தனத்தை ஒத்தது என சுட்டிக்காட்டியது.
சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்ற வாக்குறுதியை நம்பி சுமார் 2 மில்லியன் பெண்கள், அனேகமாக ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பெரும் ஆபத்துகளுக்குள் தள்ளப்படுகின்றார்கள்.
ஆனாலும் சவுதியில் மக்கள் மத்தியில் தற்போது அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, உள்நாட்டவர்களுக்கு தொழில் வழங்குவதற்கான புதிய வழிவகைகள் குறித்து சிந்திப்பதற்கு அரசகாங்கத்தைத் தூண்டியுள்ளது.
சவுதிப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக தொழிற்புரிவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அனுமதியளிக்கப்பட்டது.இவர்களில் முதலாவது குழுவினர் தற்போது தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்கள் நாளொன்றுக்கு 8 மணிநேரம் மட்டுமே வேலையில் ஈடுபடுவார்கள்.இவர்களின் சம்பளத் தொகை ஒப்பீட்டு அளவில் உயர்வானதும் நிலையானதும் கூட. இவர்கள் வேலை முடிந்ததன் பின்னர் அங்கேயே தங்க வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனாலும் இந்த தொழிலை தகுதி குறைந்தது என பார்க்கும் அனேகமாக சவுதிவாசிகள் மத்தியில் இவ்வாறு உள்ளுர்ப் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு கிளம்பிய வண்ணமே உள்ளது..
ஊக்க மருந்து பயன்பாட்டு சோதனை தொடர்பில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சில ஆட்சேபங்கள்.
இந்திய கிரிக்கெட் அணிவிளையாட்டுப் போட்டிகளில் ஊக்க மருந்தின் பயன்பாட்டை தடைசெய்ய ஊக்க மருந்துக்கு எதிரான சர்வதேச அமைப்பு தீவிரமாக முயன்று வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் அதன் வீரர்களும் இது குறித்து சில அம்சங்களில் மாற்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் ஊக்க மருந்தின் பயன்பாட்டை தடுக்க அனைத்து நாடுகளும் விளையாட்டு சங்கங்களும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இந்தச் சட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் வீர்ர்கள் சில தயக்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் ஆதரவு அளித்துள்ளது.
போட்டிகள் நடைபெறும் காலகட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான சோதனைகளுக்கு இந்திய வீரர்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால், போட்டிகள் நடைபெறாத காலகட்டத்தில் மூன்று மாதங்களுக்கு தினமும் விளையாட்டு வீரர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து தகவல்கள் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதற்கே அவர்கள் ஆட்சேபிக்கின்றனர் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலரான என் ஸ்ரீநிவாசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஓய்வு நாட்களை தனிமையில் கழிக்க விரும்பும் வீரர்களின் எண்ணங்களுக்கு இது ஊறு விளைவிக்கும் என்றும் அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டே இதற்கு இந்தியத் தரப்பிலிருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கருத்துக்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது குறித்து தமது நிர்வாகக் குழு கூடி பரிசீலிக்கும் என்றும் சர்வதேச கிரிகெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
நெஞ்சம் மறப்பதில்லை


மின்அஞ்சலாக அனுப்புக

அச்சு வடிவம்







^^ மேலே செல்க


முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை


BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>


உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள

//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter