>> Wednesday, August 19, 2009
இலங்கை அரசின் அடுத்தகட்ட நகர்வைப் பொறுத்தே அந்நாட்டுக்கான உதவிகள் அமையும் - அமெரிக்கா அறிவிப்பு
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து அதில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக இலங்கை அரசு கூறி மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டுக்கான மேலும் நிதியுதவிகள், இனி அங்கு மக்களை மீளக் குடியமர்த்துவது மற்றும் அரசியில் தீர்வுகளுக்கான நகர்வை ஒட்டியே அமையும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகாரப் பகிர்வு தொடர்பான திட்டங்களை ஜனாதிபதி விரைவில் அறிவிப்பார் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அந்நாட்டின் தெற்காசியாவுக்கான துணை வெளியுறவுச் செயலர் ராபர்ட் பிளேக் பிபிசியிடம் தெரிவித்தார்.
அரசியல் ரீதியான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படுவது தாமதப்படும் பட்சத்தில் அது தமிழ் சமூகத்தை மேலும் தனிமைப்படுத்துவதுடன் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும் எனவும் ராபர்ட் பிளேக் கருத்து வெளியிட்டார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வீழ்ச்சியடைந்திருந்தாலும், வெளிநாடுகளில் வாழும் தமிழர் சமூகம் இன்னமும் சக்தியுடன் இருப்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிகத் தகவல்களும், அமெரிக்க அரசின் கருத்துக்களுக்கு இலங்கையின் வெளியுறவுச் செயலர் பாலித கொஹன்ன தெரிவிக்கும் கருத்துக்களையும் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதுக்க முடியாது என்கிறார் மகிந்த ராஜபக்ஸ
மகிந்த ராஜபக்ஸவிடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாகவோ உள்நாட்டிலோ மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் போர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்த்துக்கள் தமக்கு கிடைத்த வண்ணம் இருப்பதாகக் கூறிய அவர் குறுகிய அரசியல் லாபங்களை கருத்தில் கொண்டிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளையும் தோற்கடிக்கும் வல்லமை தமக்கு இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஸ கூறினார்.
இலங்கை ஜனாதிபதியின் கருத்துக்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
முகாம்களில் மக்கள் 'எலிகளைப் போல வாழ்கிறார்கள்'- ஆனந்த சங்கரி
ஆனந்தசங்கரிஇலங்கையின் வடக்கே வவுனியாப் பகுதியில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் மக்களை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி செவ்வாய்கிழமை சென்று சந்தித்துள்ளார்.
முகாம்களில் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட இன்னமும் தங்கியிருப்பது எதனால் என்றும், எதனால் என்று தனக்கு தெரியவில்லை என்றும் ஆனந்தசங்கரி தெரிவிக்கிறார்.
"முகாம்களில் இருக்கும் கூடாரங்களில் எலிகளே வாழ முடியும்" என்றும் அங்கு மனிதர்கள் பல மாதங்களாக வாழ்ந்து வருவதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு முன்வந்துள்ளதையும் தாம் காணக் கூடியதாக இருந்தது என்றும் ஆனந்த சங்கரி கூறுகிறார்.
விடுதலைப் புலிகள் சிறார்களை பிடித்துச் சென்றார்கள் என்கிற குற்றச்சாட்டை கடுமையாக முன்வைத்த அரசு தற்போது முகாம்களில் சிறார்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதில் நியாயம் இல்லை என்று அங்குள்ளவர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
அவர் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
கிழக்கில் இறுதி மீள்குடியேற்றமும் பூர்த்தியடைந்ததுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சொந்த குடிமனைகளுக்கு செல்லும் மக்கள்மட்டக்களப்பு மாவட்டத்தில் 2006 - 2007 ம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்களின் மீள் குடியேற்றம் செவ்வாய்க்கிழமையுடன் பூர்த்தியடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி இறுதியாக பலாச்சோலை முகாம் மூடப்பட்டு அங்கு தங்கியிருந்த ஈரலற்குளததைச் சேர்ந்த 455 குடும்பங்கள் மீள் குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
2006 ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகவிருந்த பிரதேசங்களை நோக்கி கிழக்கில் மேற் கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 35,685 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் உள்ளக இடம் பெயர்விற்குள்ளாகி 91 முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்
இக்குடும்பங்களின் மீள் குடியேற்றம் பிரதேச ரீதியாக கட்டம் கட்டமாக 2007 ம் ஆண்டு முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டாலும் மிதி வெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடைதலைப் பொறுத்தே இம்மீள் குடியேற்றமும் இடம் பெற்று வந்தது.
இருப்பினும் திருகோணமலை மாவட்டததைச் சேர்ந்த சுமார் 500 குடும்பங்கள் தொடர்ந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 முகாம்களில் தங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது.
தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் - தமிழகத்தில் அறிவிப்பு
தமிழக அரசு சின்னம்இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயற்படுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது அவற்றின் கொடி மற்றும் சின்னங்கள், தலைவர்களின் படங்களைப் பயன்படுத்தி விளம்பரம் செய்வது போன்ற நடவடிக்கைகள் சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் நடத்துபவர்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பிரகடன நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தி பற்றிய மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
நெஞ்சம் மறப்பதில்லை
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>
உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள
//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>
0 comments:
Post a Comment