>> Wednesday, July 16, 2014
மத்தியகிழக்கில் போர்நிறுத்த முயற்சி தோல்வி; சண்டைகள் மீண்டும் ஆரம்பம்
ஒருவார இஸ்ரேலிய தாக்குதலில் காசாவில் பல கட்டிடங்கள் நிர்மூலம் ஆகியுள்ளன
காசாவில் பாலஸ்தீன ஆயுததாரிகளின்
நிலைகள் இருபதுக்கும் மேலானவற்றை தாம் வான் தாக்குதல் நடத்தி
அழித்திருப்பதாக இஸ்ரேலிய ஆயுதப்படைகள் கூறுகின்றன.
ஹமாஸும் இஸ்ரேல் மீது தொடர்ந்து ரொக்கெட் குண்டுகளை வீசி வருகிறது.காசாவிலுள்ள பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸுடன் கடந்த ஒருவாரமாக இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்த யோசனைக்கு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இஸ்ரேலிய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்திருந்தது.
ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு இந்த யோசனையை, சரணடைவதற்குச் சமம் என்று வர்ணித்து நிராகரித்திருந்தது.
எகிப்து முன்மொழிந்த போர்நிறுத்த யோசனை - ஒலிப் பெட்டகம்
தாம் தாக்குதலை நிறுத்தியிருந்த நிலையிலும் காசாவில் இருந்து ரொக்கெட்டுகள் வந்து விழுந்ததாக கூறிய இஸ்ரெல், பின்னர் மறுபடியும் காசா மீது குண்டுவீச்சை ஆரம்பித்தது.
கடந்த ஒருவார காலத்தில் இஸ்ரேலிய தாக்குதலில் பொதுமக்கள் பெரும்பான்மையாக பாலஸ்தீனர்கள் கிட்டத்தட்ட இருநூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment