>> Monday, July 14, 2014

கால்பந்து : ஜெர்மனி உலகச் சாம்பியன்


உலகக் கோப்பையுடன் ஜெர்மனி வீரர்கள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜெர்மனி வென்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது.
மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி, அர்ஜெண்டினாவை 1-0 எனும் கணக்கில் வென்று மிகவும் மதிப்பு வாய்ந்த இந்தக் கோப்பையையும், உலகப் பட்டத்தையும் வென்றது.
உலகக் கோப்பையை கைப்பற்றிய கோல் இதுதான்
ஆட்டத்தின், உபரி நேரத்தின் 23 ஆவது நிமிடத்தில், ஜெர்மனியின் கோயட்ஸ் ஒரு கோல் அடித்து, தமது அணி உலகக் பட்டத்தை பெற உதவினார்.
இந்த கோல் ஆட்டத்தின் 113 ஆவது நிமிடத்தில் வந்தது.
லியோனல் மெஸ்ஸி மிகவும் சிறப்பாக ஆடினாலும், ஜெர்மனியின் எதிர்த் தாக்குதலை அர்ஜெண்டினாவால் சமாளிக்க முடியவில்லை.
இந்த இறுதி ஆட்டத்தை கண்டுகளிக்க ஜெர்மனியின் அரச தலைவி ஏங்கலா மெர்க்கல் ரியோ டி ஜெனீரோவின் மேரக்கானா அரங்கத்துக்கு வந்திருந்தார்.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா முடிவுக்கு வந்துள்ளது.
அடுத்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.
இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக 171 கோல்கள் அடிக்கப்பட்டன.
சிறந்த கோல் கீப்பராக ஜெர்மனியின் மனுவேல் நோயரும். போட்டியின் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸியும் தேர்தெடுக்கப்பட்டனர்.
அதிக கோல் அடித்தவருக்கான தங்கக் காலணி விருதான 'கோல்டன் பூட்ஸ்' விருது கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸுக்கு வழங்கப்பட்டது.
தென் அமெரிக்காவில் ஒரு ஐரோப்பிய அணி, உலகக் கோப்பை போட்டியை வெல்வது இதுவே முதல் முறை


0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter