
பள்ளிக்கூட மாணவர்கள்(ஆவணப்படம்)
பள்ளியை பாதியில் கைவிட்டவர்கள்
இலங்கையில் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்துபோன போர், சுனாமி மற்றும் பல சமூகக் காரணங்களால் தமது பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
போர் மற்றும் சுனாமி காரணமாக தமது தாய், தந்தையரை இழந்த பல நூற்றுக்கணக்கான பிள்ளைகள், வயது முதிர்ந்த தமது பாட்டன், பாட்டியின் பராமரிப்பில் இருப்பதால், பள்ளிக்கூடம் செல்லும் வசதியை இழந்திருக்கிறார்கள். போரினால் வலது குறைந்த பெற்றோரின் குழந்தைகள், ஆயுதக்குழுக்களின் முன்னாள் உறுப்பினர்களின் குழந்தைகளும் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றன.
பெண்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற பல குடும்ப மாணவர்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சுமார் இருபதினாயிரம் சிறார்கள் இவ்வாறு பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டிருப்பதாக அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுகின்ற போதிலும், அரசாங்க நிறுவன அதிகாரிகளின் தகவல்களின் படி கிட்டத்தட்ட 5000 சிறார்கள் இவ்வாறு பள்ளிப்படிப்பை கைவிட்டிருக்கிறார்கள்.
அதேவேளை இவ்வாறு பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டவர்களை மீண்டும் பள்ளிக்கூடங்களில் சேர்க்கவும், அல்லது அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கவும் பல முயற்சிகளில் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
ஆயினும் அவற்றில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அத்தகைய திட்டங்களுக்கு போதிய வளம் இல்லாத நிலை காணப்படுவதாகவும் கூட விமர்சனங்கள் உள்ளன.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க