>> Thursday, July 1, 2010

விம்பிள்டன் டென்னிஸ்-ஃபெடரர் தோல்வி


விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் நடப்பு சாம்பியனான ரோஜர் ஃபெடரர் தோல்வியடைந்துள்ளார்.
கால் இறுதிப் போட்டியில் சற்று முன்னர் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், ஃபெடரரை 6-4,3-6,6-1,6-4 என்கிற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதன் மூலம் ஏழாவது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் டென்னிஸ் பட்டத்தை வெல்லும் ஃபெடரின் கனவு தகர்ந்து போயுள்ளது. 2002 ஆண்டு முதல் இறுதிப் போட்டிக்கு முன்னர் அவர் தோல்வியடைந்தது கிடையாது.

அரையிறுதிப் போட்டியில் பெர்டிச் நோவாக் யாக்கோவிச்சை எதிர்த்து விளையாடுவார்.


விம்பிள்டன் டென்னிஸ் அரங்கில், ரோஜர் ஃபெடரர் போன்ற ஒரு வீரரை வெல்வது மிகவும் எதிர்பாராத ஒன்று


தாமஸ் பெர்டிச்

1990 ஆம் ஆண்டு இவான் லெண்டல் விம்பிள்டன் போட்டிகளில் அரை இறுதிக்கு தகுதி பெற்ற பிறகு, செக் நாட்டு வீரர் ஒருவர் அரை இறுதிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறை.

இந்தத் தோல்வியின் காரணமாக உலக ஆடவர் டென்னிஸ் தரப்பட்டியலில் 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மூன்றாம் இடத்துக்கு ரோஜர் ஃபெடரர் தள்ளப்பட்டுள்ளார்.

Read more...


த தே கூ தலைவர் சம்பந்தர்

த தே கூ அரசியல் கட்சியாகிறது



தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு திடீரெனெ எடுக்கப்பட்டது அல்ல என அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக நான்கு கட்சிகள் இணைந்த ஒரு கூட்டமைப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வந்தது.

அண்மையில் இலங்கையில் முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற பெயரிலேயே போட்டியிட்டது.

கடந்த தேர்தலின் போது தாங்கள் பதிவு செய்யாத காரணத்தினால் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அதன் நாடாளுமன்ற குழுவின் தலைவரான இரா சம்பந்தர் நியமிக்கபப்ட்டுள்ளார்.

கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யபப்ட்டாலும், அதில் அங்கம் வகித்திருந்த கட்சிகளை கலைக்க வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

தமிழ் மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவே தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாவும் அவர் மேலும் கூறுகிறார்.

Read more...





பாலியல் துஷ்பிரயோகம் எனப் புகார்


பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முன்னாள் போராளிகள் கூறுகிறார்கள்
கொழும்பு ஆடைத்தொழிற்சாலைகளில் இலங்கை அரசாங்கத்தால் பணிக்கு சேர்த்துவிடப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இது குறித்து தமிழோசையிடம் பேசிய ஸ்ரீதரன் அவர்கள், மறுவாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆடைத்தொழிற்சாலை பணிகளுக்காக அரசாங்கத்தினால் பயிற்சி வழங்கப்பட்டு, கொழும்பில் பணிக்கு சேர்க்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளே தமது பெற்றோரின் ஊடாக இது குறித்து முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஆடைத் தொழிற்சாலைகளில் இருப்பதை விட முன்னர் இருந்த மறுவாழ்வு நிலையங்களுக்கோ, சிறைக்கோ திரும்ப தாம் தயாராக இருப்பதாகவும் அந்த போராளிகள் கூறியுள்ளதாக சிறிதரன் தெரிவித்தார்.

அரசு மறுப்பு


அமைச்சர் டியூ குணசேகர
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளது போல எந்தச் செய்தியும் தமது பார்வைக்கு வரவில்லை என இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்த்திருத்த்ததுறை அமைச்சர் டியூ குணசேகர தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக தான் நாடாளுமன்றத்தில் இருந்த போதிலும், ஸ்ரீதரன் தன்னிடம் இது குறித்து ஏதும் தெரிவிக்காமால், வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது ஒரு இடைச் செய்தியாகவே இதைத் தெரிவித்தார் எனவும் அவர் கூறுகிறார்.

எனினும் தற்போது இந்த விடயம் தமிழோசை மூலம் தனது பார்வைக்கு வந்துள்ள நிலையில், இது குறித்து தான் விசாரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றபடி பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள், முன்னாள் போராளிகள் ஆகியோரை விடுவிப்பது தொடர்பில், நீதித்துறை, சட்டமா அதிபர், காவல்துறையினர் ஆகியோரே முடிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தான் ஒரு அறிக்கையை கோரியுள்ளதாகவும், அது கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் விவாதிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter