பணத்தைத் துதிக்கும் போக்குக்கு போப் பிரான்சிஸ் கண்டனம்
பணத்தைத் துதிக்கும் போக்கை சாடுகிறார் புதிய போப்
பார்வைக்குத் தெரியாத கொடுங்கோலாட்சியை பணம் செய்கிறது என்று சாடியுள்ள போப் பிரான்ஸிஸ் உலகத்தலைவர்கள் சந்தைகள் மற்றும் நிதிச்சந்தையில் ஊடக வணிகம் செய்பவர்களின் சக்தியை கட்டுப்படுத்தவேண்டும் என்று கோரியிருக்கிறார்.
வத்திக்கானில் தூதர்களிடம் பேசிய போப் பிரான்சிஸ், முகமில்லாத உலகப் பொருளாதரம் செலுத்தும் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழும் மக்களுக்கு உதவ, அவசரமாகத் தேவைப்படும் சீர்திருத்தங்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன என்றார்.
பணம் என்பது, பைபிளின் "எக்ஸோடஸ்" புத்தகத்தில் குறிப்பிடப்படும், இஸ்ரேலியர்களால் வழிபடப்பட்ட தங்கக் கன்று போல , ஒரு இதயமில்லாத , துதிக்கப்படும் விஷயமாகிவிட்டது என்றார் அவர்.
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு, வறிய மக்களைப் பாதுகாக்க வேண்டிய தனிப்பட்ட கடமை இருக்கிறது என்றார் புதிய போப்.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க