வங்கதேசத்தில் கடந்த புதன்கிழமை நடந்த கட்டட விபத்தில்
சிக்கியவர்களில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இன்னும் தேடப்பட்டுவருகின்றனர்.
தலைநகர் டாக்கா அருகே உள்ள ராணா பிளாஸா என்ற ஆடைத் தொழிற்சாலைக் கட்டடம்
இடிந்துவிழுந்ததில் குறைந்தது 273 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இடிந்த கட்டடத்தின் நான்காவது மாடிக்குள் சிக்கியிருந்தவர்களில் 41 பேர் வியாழக் கிழமை காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மேற்குலக சந்தைகளுக்காக ஆடைத் தைக்கும் பெருந்தொழிற்சாலைகள் இந்தக் கட்டடத்தில் இயங்கிவந்துள்ளன.
இந்த விபத்தையடுத்து வங்கதேசத்தில் தொழிலாளர்களின் தொழிற்தள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க