>> Friday, April 26, 2013


வலிகாமம் பகுதியை பார்க்க ரணில் குழுவினருக்கு அனுமதி இல்லை


ரணில் தலைமையிலான குழுவினர் நான்கு நாள் பயணமாக யாழ்ப்பாணத்தில் உள்ளனர்
ரணில் தலைமையிலான குழுவினர் நான்கு நாள் பயணமாக யாழ்ப்பாணத்தில் உள்ளனர்
இலங்கையின் வட மாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாகச் சென்றுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கு வலிகாமம் அதியுயர் பாதுகாப்பு வலய பிரதேசத்துக்கு சென்று பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழன் மாலை வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்தை நேரடியாகப் பார்வையிட முயன்றச் சென்ற ரணில் குழுவினரை இராணுவத்தினர் திருப்பியனுப்பிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்குப் பிரதேசங்களில் இராணுவ தேவைக்காக காணி எடுத்தல் சட்டத்தின் கீழ் அரசாங்கம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள காணிகளை எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தது.
வலிகாமத்தில் மக்கள் காணிகளை இராணுவத் தேவைக்காக எடுக்கம் அரசின் நடவடிக்கையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம்
வலிகாமத்தில் மக்கள் காணிகளை இராணுவத் தேவைக்காக எடுக்கம் அரசின் நடவடிக்கையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம்
கையகப்படுத்தப்படவுள்ள குறித்த பகுதிக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினரை, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி உள்ளேவர அனுமதிக்க முடியாது என்று அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் தெரிவித்துவிட்டனர்.
'இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்த போதிலும் இராணுவத்தினர் மேலதிகாரிகளின் அனுமதியின்றி உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்' என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இரண்டாவது நாளாக, தாம் யாழ்ப்பாணத்தில் இன்று சிவில் சமூக முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடி வருவதாகவும், நாளை கிளிநொச்சிக்கும் வவுனியாவுக்கும் மறுநாள் மன்னார் மாவட்டத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter