>> Saturday, January 22, 2011
ஊழல் ஒழிப்பு: அமைச்சர்கள் குழு கூட்டம்
இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
ஊழல் ஒழிப்பு தொடர்பான பிரேரணைகளை ஆராய்வதற்கென இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம் பிரணாப் முகர்ஜி தலைமையில் தில்லியில் நடக்கிறது.
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் எதிரான ஊழல் வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிவு வழங்குவது உள்ளிட்ட பிரேரணைகளை இக்குழு ஆராயவுள்ளது.
அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் மோசமான முறைகேடுகளிலும், அப்பட்டமான ஊழலிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் விஷயங்களை துரிதகதியில் விசாரிப்பதை அனுமதிக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 311ஆவது ஷரத்தில் மாற்றங்கள் கொண்டுவருவது பற்றி அமைச்சர்கள் குழு ஆராயும் என்று தெரிவிக்கப்படுகிறது.
விருப்ப ஒதுக்கீடு செய்ய அமைச்சர்களுக்குள்ள அதிகாரம், அரசாங்கம் பொருட்களையும் சேவைகளையும் வாங்குவதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவருவது போன்ற ஊழல் தொடர்பான பிற விஷயங்களையும் இந்த அமைச்சர்கள் ஆராய்வார்கள்.
கடைசியாக நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கட்சித் தலைவி சோனியா காந்தியால் அறிவிக்கப்பட்ட ஐந்து அம்சத் திட்டத்தின் அங்கமாக இந்த அமைச்சர்கள் குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டிருந்தது.
0 comments:
Post a Comment