
மெர்வின் சில்வா
மெர்வின் சில்வா 'பதவி நீக்கம்'
இலங்கையின் நெடுஞ்சாலைத்துறை துணை அமைச்சர் மெர்வின் சில்வா அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது கட்சித் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் மெர்வின் சில்வாவை உடனடியாகப் பதவி நீக்குவதாக அறிவித்ததாக லங்காபுவத் என்ற இலங்கை அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மெர்வின் சில்வா நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகத் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பல நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், பலமுறை எச்சரித்த பிறகும் அவர் இப்படிச் செயல்பட்டதால் அவர் நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியதாக லங்காபுவத் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்தது தொடர்பில் மெர்வின் சில்வாவுக்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்திருந்தன.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க