Tuesday, August 31, 2010


தினமலருக்கு எதிராக தமிழக அரசு நோட்டீஸ்
தமிழக அரசின் கலைஞர் வீட்டு வசதித் திட்டம் குறித்தும் முல்லைப் பெரியார் அணை பிரச்சினை குறித்தும் தமிழ் நாளேடான தினமலர் தவறான தகவல்கள் வெளியிட்டிருப்பதாக தமிழக அரசு புகார் கூறியுள்ளது.

அச்செய்திகள் குறித்து விளக்கம் கேட்டு அந்நாளேட்டிற்கு தாக்கீது அனுப்பப்பட்டிருக்கிறது.

கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டித் தரப்படும் வீடுகளின் அளவைக் குறைத்தும், தவிர அளவை அடிக் கணக்கில் காட்டாமல் மீட்டர் கணக்கில் காண்பித்து வீட்டின் அளவு மிகக்குறைவாக இருப்பதுபோல் ஒரு பிரமையை ஏற்படுத்தவும் அந்நாளேடு முயற்சித்திருக்கிறது என்று தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.

இந்த வீடுகள் கட்டுவதற்காக தற்போது ஏழை மக்கள் வசிக்கும் குடிசைகள் பிரித்துப்போடப்பட்டு அவர்கள் ஒண்டுவதற்குக் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று உண்மைக்கு புறம்பாக தினமலர் செய்திவெளியிட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

முல்லைப் பெரியார் பிரச்சினையை ஆராயவென உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் குழுவில், தமிழகத்தின் சார்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லஷ்மணன் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழகத்தின் வழக்கறிஞரும் எவரும் பங்குபெறாததால் மாநிலத்திற்கு ஏதோ பின்னடைவு ஏற்பட்டுவிட்டதைப் போன்று உண்மைக்குப் புறம்பாக தினமலர் செய்தி வெளியிட்டிருக்கிறது என்றும் அரசு கூறியுள்ளது.

இவையெல்லாம் அரசுக்கு அவப்பெயர் உருவாக்குவதற்காக திரித்து வெளியிடப்பட்ட செய்திகள், அவற்றை திரும்பப் பெறவேண்டும் என் அரசின் தாக்கீது கூறுகிறது.

அப்படி திரும்பப் பெறாவிட்டால் அதன் மீது வழக்கு தொடரப்படும் என அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா கூறியிருக்கிறார்.

சௌதி தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்


கொழும்பின் சௌதியரேபியத் தூதரகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்
தூதரகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைய பெண்கள் பங்குகொண்டிருந்தனர்
சௌதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்த சமயத்தில் உடலில் ஆணிகளும் ஊசிகளும் செலுத்தப்பட்டு ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சித்ரவதைப் செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்து கொழும்பிலுள்ள சௌதி தூதரகம் முன்பு ஓர் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

சௌதி அரேபியாவுக்கு செல்லுகின்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை சௌதி அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொழும்பில் உள்ள சௌதி தூதரகம் முன்பு பெருந்திரளாகக் கூடி நின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டதோடு பலவித வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஆரியவதிக்கு நடந்தது போன்ற கொடுமை வேறு எவருக்கும் நடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சௌதி அரசாங்கத்துக்கு உள்ளது என்பதை வலியுறுத்துவது இவர்களுடைய ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாக இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு சௌதி தூதரகம் முன்பு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

அரசியல் பிரமுகர்கள், ஆர்வலர்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக சென்று திரும்பியிருந்தவர்கள் என்று பல தரப்பினராக சுமார் 400 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

மத்தியகிழக்கிற்கு வேலைக்கு செல்வோருக்கு அரசாங்கம் வழங்கிவருகின்ற உதவி ஒத்ததாசைகள் போதாது என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஐக்கிய ததேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச கடப்பாடுகளை சௌதியரேபிய அரசாங்கம் அங்கீகரித்து நடைமுறைப்படுத்தாத வரையில் இலங்கையிலிருந்து தொழிலாளர்கள் அந்நாட்டுக்கு வேலைக்கு செல்லக்கூடாது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் சௌதி தூதரகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

ரியாத்தில் ஆரியவதி வீட்டுப் பணிப் பெண்ணாக வேலைசெய்த இடத்தில் தனக்ககு வேலைப்பளு அதிகமாக இருந்தது என்று அவர் புகார் கூறியதை அடுத்து அவ்வீட்டின் எஜமானியும் எஜமானருமாகச் சேர்ந்து அவரது உடலில் 24 இடங்களில் ஆணிகளையும் ஊசிகளையும் காய்ச்சி ஏற்றி சித்ரவதை செய்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை திரும்பிய ஆரியவதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை மூலம் பெரும்பான்மையான ஆணிகள் அகற்றப்பட்டு அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.

தர்மபுரி பஸ் எரிப்பு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு



தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பில் அ இ அ தி மு க கட்சித் தொண்டர்கள் மூன்று பேருக்கான மரண தண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

2000ஆம் ஆண்டு தர்மபுரியில் அ தி மு க வினர் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது தீ வைக்கப்பட்ட ஒரு பேருந்தில் மூன்று கல்லூரி மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பானது இந்த வழக்கு.

கீழ் நீதிமன்றம் வழங்கியிருந்த மரண தண்டனைத் தீர்ப்பை 2007 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்திருந்தது. நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.சௌஹான் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பை மேன்முறையீட்டில் உறுதி செய்திசெய்துள்ளது.

இந்த வழக்கில் வேறு இருபத்து ஐந்து பேருக்கு 2 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டையே உலுக்கியிருந்த இச்சம்பவத்தில் கோயமுத்தூரில் உள்ள தமிழக வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

அ தி மு க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது ஒரு வழக்கில் குற்றத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அக்கட்சித் தொண்டர்கள் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது, 45 மாணவ மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள் சென்றுகொண்டிருந்த இந்தப் பேருந்து ஆர்பாட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டிருந்தது.

அரசியல் சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

அமைச்சர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாகப் போட்டியிட இச்சட்டத் திருத்தம் வழிகோலும்

இலங்கையில் ஜனாதிபதியாக ஒருவர் மூன்றாவது ஆட்சிக்காலத்துக்கும் தொடருவதற்கு வழி செய்யும் அரசியலமைப்புத் திருத்ததுக்கான பிரேரணைக்கு இலங்கை அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

அந்தப் பிரேரணை இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஒரு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த திருத்தத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது நீங்கிவிட்ட நிலையில், ஒரு வாரகாலத்தில் ஜனாதிபதியின் ஆட்சிக்காலங்களுக்கான கட்டுப்பாடு நீங்கும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த திருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், 2016 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் போட்டியிட முடியும்.

17ஆவது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கும் தற்போது அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது

Monday, August 30, 2010



குகைக் கரடிகள் அழிய மனிதனே காரணமானான்



உறை யுகத்து குகைக்கரடி-கற்பனை ஓவியம்
குகைக் கரடிகள் அழிந்து போனமைக்கு மனிதன் தான் காரணம் என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உணவுக்காக அல்லாமல் கரடிகளின் வசிப்பிடமான குகைகளை ஆதி மனிதன் அபகரித்ததை தொடர்ந்து அந்தக் கரடிகள் மறைந்து விட்டதாக ஜெர்மனியில் இருக்கின்ற மேக்ஸ் பிளான்க் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிட்டதட்ட 500 கிலோ எடையுடன் இருந்த இந்த குகை கரடிகள் 25000 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டன. இதற்கு காரணம் ஆதி மனிதன் என இப்போது ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மனிதனின் ஜனத்தொகை பெருக பெருக, கரடிகள் அழியும் எண்ணிக்கையும் அதிகரித்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


ஐரோப்பிய குகைகளில் காணப்பட்ட உறையுக கரடியின் மண்டையோடு
ஐரோப்பிய குகைகளில் காணப்பட்ட உறையுக கரடியின் மண்டையோடு
கரடிகளின் இடத்தை மனிதன் அத்துமீறி ஆக்கிரமிக்க ஆரம்பித்ததை தொடர்ந்து வசிக்க இடம் இல்லாமல் தவித்து போன கரடிகள் இறந்து விட்டன.

ஐரோப்பாவில் உள்ள பல குகைகளில் உறையுகத்து கரடிகளின் எலும்புகள் கிடைத்துள்ளன.

மனிதன் மட்டுமன்றி காலநிலை மாற்றங்களால் கரடிகளுக்கு சரியான உணவு பொருட்கள் கிடைக்காமல் போனதாலும் அவை மறைந்து இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

எனினும் குகைகளில் வாழ்ந்த கரடிகளை விரட்டி விட்டு அங்கே குடியமர்ந்து கொண்ட மனிதனால் தான் கரடிகளின் மறைவு உறுதியானதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


அணுகுண்டுப் பரிசோதனை தடை தினம்



அணுகுண்டு புகை மண்டலம்
அணுகுண்டுப் பரிசோதனைக்கு எதிரான முதலாவது சர்வதேச தினத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகஸ்ட் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கின்றது.

பல தசாப்தங்களாக நடத்தப்பட்டுள்ள அணுகுண்டுப் பரிசோதனைகள் மூலம் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் விளைவிக்கப்பட்டுள்ள கெடுதல்கள் குறித்த கவனத்தை ஈர்க்கும் நோக்குடனும் பரிசோதனைத் தடைக்கான பரந்துபட்ட உடன்படிக்கைக்கு ஆதரவை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்தும் பிரசாரத்திற்கு இந்த நிகழ்வு மேலும் உந்துசக்தியாக அமையும் என ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் நம்புகின்றார்.

சோவியத் யூனியனின் முதலாவது அணு குண்டு பரிசோதனை நிலையமாக பயன்படுத்தப்பட்டுவந்த மத்திய ஆசியாவிலுள்ள குடியரசான கஸக்ஸ்தானே, 61 ஆண்டுகளுக்கு முன்னர், அணுகுண்டுப் பரிசோதனைக்கான இந்த உலகளாவிய தினத்தை முன்மொழிந்தது.

இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட சுமார் 456 பரிசோதனைகள் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் அளவு மட்டும் ஜெர்மன் நாட்டின் மொத்த பரப்புக்கு சமமானது.

அங்கு சுமார் ஒன்றரை மில்லியன் மக்கள் உயிர் மற்றும் சுகாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச உடன்படிக்கை முயற்சியில் தடைகள்

1950ம் ஆண்டு முதல் 20ம் நூற்றாண்டின் இறுதிவரை ஆஸ்திரேலியா முதற்கொண்டு பசுபிக் தீவுகள் மற்றும் அமெரிக்காவிலுள்ள நெவாடா வரையுமான பிரதேசங்களில் தரைக்கு மேலும் தரைக்கடியிலும் கடலுக்கடியிலும் என ஆயிரக்கணக்கான அணுகுண்டுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.



கஸக்ஸ்தான் எல்லை வரைபடம்
உலகிலுள்ள 150 இற்கும் அதிகமான நாடுகள் அணுகுண்டுப் பரிசோதனைத் தடைக்கான பரந்துபட்ட உடன்படிக்கையை அங்கீகரித்துள்ள போதிலும் சில நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிஸ்தான்,
இஸ்ரேல், இரான் மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றமை அந்த உடன்படிக்கை அமலுக்கு வருவதில் பெரும் தடையாக இருந்து வருகின்றது.

அணு ஆயுதங்களைக் களைவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதெல்லாம் இந்த நாடுகளே பல ஆண்டுகளாக அந்த முயற்சிகளுக்கு தடைக்கற்களாக இருந்து வருகின்றன.

தனது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக அணு ஆயுதக் களைவை வலியுறுத்திவரும் ஐநாவின் தலைமைச் செயலர் பான் கீ மூன், பரிசோதனைத் தடை உடன்படிக்கையை 2012ஆம் ஆண்டளவில் அமுலுக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றார்.

இதன்பொருட்டு ஐநாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அணு ஆயுதக்களைவு உச்சி மாநாடு ஒன்றுக்காக உடன்படிக்கையின் உறுப்பு நாடுகளுக்கு பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்.


பந்தய ஊழல் சர்ச்சையில் பாக். வீரர்கள்



பந்தய ஊழல் ஒன்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இங்கிலாந்தை எதிர்த்து பாகிஸ்தான் அணி தற்சமயம் லண்டனில் விளையாடி வருகின்ற டெஸ்ட் ஆட்டம் தொடர்பாக எழுந்துள்ள இந்தப் பந்தய ஊழல்
குற்றச்சாட்டு சம்பந்தமாக ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீசும் போது குறிப்பிட்ட நேரத்தில் அவர்களை நோ-பால் வீச வைப்பதாக ஏற்பாடு செய்தமைக்காக அந்த நபருக்கு பெருந்தொகையான பணம் கொடுத்திருந்ததாக பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று கூறுகிறது.

லார்ட்ஸில் தற்போதைய ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முதல் நாள் இரவு, தமது நிருபர் ஒருவர் பந்தயத் தரகர் போல நடித்து, பாகிஸ்தான் அணியோடு தொடர்புடையவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பவுண்டுகள் பணம் கொடுத்திருந்ததாக நியூஸ் ஆஃப் த வொர்ல்ட் பத்திரிகை கூறுகிறது.

அதற்குப் பிரதிபலனாக ஆட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை நோ-பால்கள் வீசவைக்க ஏற்பாடு செய்வதாக அந்த நபர் உத்திரவாதம் அளித்திருந்தார்.

அவர் சொன்னது போலவே நடந்தது. அவர் குறிப்பிட்ட அந்த மூன்று கட்டங்களில் பாகிஸ்தான் வீரர்கள் நோபால்களை வீசியிருந்தனர்.

முகம்மது ஆஸிப் மற்றும் முகம்மது ஆமிர் மீது விசாரணைகள்


பாகிஸ்தான் அணி வீரர்கள்(ஆவணம்)
பாகிஸ்தான் அணி வீரர்கள்(ஆவணம்)
ஆட்டத்தின் இது போன்ற உட்தகவல்கள் தற்போது பந்தயம் கட்டும் தொழில் நடத்துவோருக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கிறது. ஏனென்றால் ஆட்டத்தின் இறுதி முடிவு பற்றி மட்டுமல்லாது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்கள் சம்பந்தமாகவும் அவர்கள் மக்களைப் பந்தயம் கட்ட வைத்து பணம் சம்பாதிக்க முடியும்.

ஆனால் விளையாட்டு வீரர்களைப் பொறுத்தமட்டில் ஆட்டத்தின் எந்த ஒரு அம்சத்திலும், விளைவை முன்கூட்டியே தீர்மானித்து பொய்யாக அவர்கள் விளையாடுவது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆஸிப் மற்றும் முகம்மது ஆமிர் ஆகியோர் தற்போது இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

விசாரணைகள் நடக்கின்றன என்றாலும் ஆட்டம் தொடர்ந்து நடக்க சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதி அளித்திருந்தது.

லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகின்ற ஆட்டத்தின் இறுதி முடிவைப் பாதிக்கக்கூடிய எந்த ஒரு விடயத்திலும் எந்த ஆட்டக்காரரும் சம்பந்தப்பட்டிந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது நாளில் தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த பாகிஸ்தான் வீரர்கள் 147 ரன்களில் ஆட்டம் இழக்கவே, இங்கிலாந்து 225 ரன்களில் ஆட்டத்தை வென்று டெஸ்ட் தொடரையும் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த சம்பவம் கிரிக்கெட் ஆட்டத்தின் மீது மீண்டும் கருநிழலை படியச் செய்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பசில் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள்-கிளிநொச்சியில்
'கிளிநொச்சி மாவட்டம் முக்கியம்'-பசில்

இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி மாவட்டம் மிக முக்கியமானது என ஐனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் போர் முடிந்ததன் பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் முழுமையாக விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இந்த மாவட்டத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடர்பான உயர்மட்ட மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டபோதே இதனை அவர் கூறியிருக்கின்றார்.

‘இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி மாவட்டம் மிகவும் முக்கியமானது. இங்குள்ள விவசாயிகளுக்கு உதவுவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்க முடியும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏ9 வீதியில் காணப்படுகின்ற கூரையற்ற கட்டிடங்கள் அனைத்தையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களும், மற்றவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பசில் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ள தகவலின்படி, கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கையின் மூலம், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 222 பேரைக் கொண்ட 33 ஆயிரத்து 657 குடும்பங்கள் இதுவரையில் அந்த மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள விவசாய குடும்பங்கள் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் நெற்செய்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Friday, August 27, 2010


பாக்.: புதிய வெள்ள அபாயம்
ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தில் இன்னொரு பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும் உடனடி அபாயம் ஏற்பட்டுள்ளதென்று பாகிஸ்தானின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அங்கே சிந்து நதி பெருக்கெடுத்து பல இடங்களில் கரை உடைத்து ஓடுகிறது.

ஐ.நா. கவலை

வட மேற்குப் பாகிஸ்தானில் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பத்து லட்சம் பேருக்கு வான் வழியாக மட்டுமே சென்று வெள்ள நிவாரணம் வழங்க முடியும் என்ற நிலை உருவாகியிருப்பதால், கூடுதல் ஹெலிகொப்டர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறது என்றும் அப்போதுதான் அத்தியாவசியமானப் பொருட்களை வாடும் மக்களுக்கு வழங்க முடியும் என்றும் ஐ.நா. மன்றம் தெரிவித்துள்ளது.

உணவு தேவைப்படுவோரில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே தங்களால் உணவு உதவிகளை வழங்க முடிந்துள்ளது என்று ஐ.நா. மனிதாபிமானப் பணிகள் சார்பாகப் பேசவல்லவரான மௌரிஸியோ ஜியூலியானோ கூறியுள்ளார்.


அறுபது லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுகிறது. ஆனால் இருபது லட்சத்துக்குக்ம் குறைவானவர்களுக்கே எங்களால் இதுவரையில் உணவு உதவிப் பொருட்களை கொண்டு சேர்க்க முடிந்துள்ளது. ஆகவே எம்முடைய உணவு உதவி கிடைக்காதவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.

ஐ.நா. அதிகாரி

தொண்டு ஊழியர்கள் மீது தாக்குதல் அச்சுறுத்தல்

இதனிடையே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச தொண்டு நிறுவன ஊழியர்களை இலக்குவைத்து தாக்க தீவிரவாதிகள் திட்டமிடுவதாக எச்சரிக்கை வந்துள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த எச்சரிக்கையின் விளைவாக பாகிஸ்தானில் நிவாரணப் பணி செய்து வரும் ஐ.நா. அமைப்புகள் தமது பாதுகாப்பு சூழ்நிலையை மீளாய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தெஹ்ரீக்-இ-தாலிபான் என்ற அமைப்பிடம் இருந்து நிவாரணப் பணியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் அதிக வன்முறையும் கடும்போக்கும் நிறைந்த ஒரு ஆயுதக் குழு இதுவாகும்.

தொண்டு நிறுவனங்கள் தம்முடைய பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்குவார்களேயானால் அது நிவாரணங்களை விநியோகிப்பதில் அவர்களுக்குள்ள வல்லமையையும் வேகத்தையும் வெகுவாக பாதித்துவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அன்னை தெரசா நூற்றாண்டு விழா தொடங்கியது

அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 26.8.2010 அன்று ஒரு சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கியுள்ளன.

கொல்கத்தாவில் அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி தலைமையகத்தில், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இந்த சிறப்பு வழிபாட்டை நடத்தினர்.

மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி 1950 ஆம் ஆண்டு அன்னை தெரசாவால் தொடங்கப்பட்டது.

1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி, தற்போது மாசிடோனியா நாட்டின் தலைநகராக இருக்கும் ஸ்கோப் நகரில், அவர் பிறந்தார்.

அவரது இயற்பெயர் காங்க்ஸே போயாக்யூ, அவர் பிறந்த போது ஸ்கொப் நகரம் அல்பேனியாவில் இருந்தது.

கொல்கத்தா நகரின் குடிசைப் பகுதியில் அவர் ஆற்றிய பணிகளுக்காக 1979 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

அவருக்கு “புனிதர்” எனும் பட்டத்தை வழங்குவதற்கான முன் நடவடிக்கைகளை ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாட்டிகன் 1997 ஆம் ஆண்டு முன்னெடுத்தது.

அயராத உழைப்பாளி"-போப் பெனடிக்ட்

இறைவனால் வழங்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அன்பளிப்புக்காக மனித குலம் இறைவனுக்கு நன்றி சொல்லும் ஒரு ஆண்டாகவே இந்த நூற்றாண்டு விழா அமையும் என தான் நம்புவதாக போப் பெனடிக்ட் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதும் அன்போடு மக்களுக்கு அயராத உழைப்பை அவர் மேற்கொண்டார் என போப் பெனடிக்ட் அன்னை தெரசாவின் நூற்றண்டு விழா தொடக்கம் குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்வும், மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளும், தொடர்ந்து இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தும் என, அன்னை தெரசாவால் ஏற்படுத்தப்பட்ட மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் தற்போதைய தலைவரான சகோதரி பிரேமா தெரிவித்துள்ளார்.


அன்னை தெரசா இறைவனால் அளிக்கப்பட்ட மதிப்பிட முடியாத ஒரு கொடை

போப் பெனடிக்ட்

நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள், இறக்கும் தருவாயில் இருந்தவர்கள், அனாதரவான நிலையில் இருந்தோர்களுக்காக தனது வாழ்க்கையை அர்பணிக்கும் நோக்கில் 1929 ஆம் ஆண்டு அன்னை தெரசா இந்தியாவுக்கு வந்தார்.

1997 ஆம் ஆண்டு அவர் மரணமடைந்த போது அவர் உருவாக்கிய மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டியின் தலைமையகத்திலேயே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நடவடிக்கையை மறைந்த போப் இரண்டாவது ஜான் பால் 2003 ஆம் ஆண்டில் முன்னெடுத்தார்.


இலங்கை வளர்ச்சித்திட்டம் குறித்த கூட்டம்


50,000 வீடுகளை இந்தியா கட்டித்தரும்

இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக இருநாட்டுப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று டெல்லியில் நடைபெற்றது.

இலங்கை அரசின் சார்பில், பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். இந்தியக் குழுவில், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

கடந்த ஜூன் மாதம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்தியா வந்தபோது, இலங்கையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியா செயல்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டிருந்தது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு 50,000 புதிய வீடுகளைக் கட்டித் தருதல், ரயில்வே, விமானத் தளம் மற்றும் துறைமுகங்களை மேம்படுத்துதல், தொழிற்பயிற்சி அளித்தல், விவசாய முன்னேற்றத்துக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. அவற்றுக்காக, இந்தியா ஏற்கனவே சில உதவிகளையும் வழங்கியிருக்கிறது.


இடம்பெயர்ந்த ஒரு பெண்

இந்த நிலையில், அந்தப் பணிகள் தொடர்பாக இந்தியக் குழுவினரிடம் இலங்கைப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தார்கள். பணிகளின் தற்போதைய நிலவரம், அவற்றுக்குத் தேவைப்படும் அடுத்தகட்ட உதவிகள் உள்ளிட்ட விவரங்களை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அதையடுத்து, இந்தியத் தரப்பில் அந்தக் கோரிக்கைகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விளக்கப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அவர்கள் விரைவில் இலங்கை சென்று, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட உள்ள நிலையில், அப்போது அத்திட்டங்கள் தொடர்பாக அடுத்தகட்டமாக விவாதிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்கள் மாலை இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் போர் முடிவடைந்து நிவாரணத் திட்டங்களுக்காக இந்தியா அறிவித்துள்ள உதவிகளை இலங்கை எந்த வகையில் பயன்படுத்தி வருகிறது என்பது தொடர்பாக, பிரணாப் முகர்ஜியிடம் பஸில் ராஜபக்ஷ அவர்கள் பல்வேறு விவரங்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தேவைப்படும் நிதி உதவிகள் குறித்தும் இருநாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.



இலங்கைக்கு உதவிகள் தேவை-ஐ நா


ஐ நா வின் சின்னம்
சர்வதேச உதவிகள் இலங்கைக்கு அவசியம் தேவை-ஐ நா
இலங்கையில் சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து தங்கியிருந்து பணியாற்ற வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்று இலங்கைக்கான ஐ நா வின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களுக்கான உதவிகளையும், மீண்டும் தமது பகுதிக்கு திரும்பியுள்ளவர்களுக்கான அவசரத் தேவைகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதால் சர்வதேச அமைப்புகளின் உதவி இலங்கைக்கு இன்றியமையாததாகவே இருக்கின்றது எனவும் அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பணிகள் முடிவடைந்துவிட வில்லை என்பதையும் தெளிவாக தனது அறிக்கையில் நீல் பூனே சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நெருக்கடியான காலப்பகுதியில் தொடர்ந்து சர்வதேச அமைப்புகளின் ஆதரவை ஐ நா கோருகிறது எனவும் அவரது அறிக்கை கூறுகிறது.

மிகவும் தேவைப்படும் இக்காலத்தில் அளிக்கப்படும் உதவிகள் தேவையான மக்களுக்கு நேரடியாகவும், இலங்கையின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் எனவும் நீல் பூண் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சிக்கு அமைதி அவசியம்


இடம் பெயர்ந்த மக்கள்
இடம் பெயர்ந்த மக்கள்

மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் நலன்கள் பேணப்படுவது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவசியம் என்றும், நீடித்திருக்கக் கூடிய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அது அத்தியாவசியம் எனவும் தெரிவித்துள்ள ஐ நா வின் வதிவிடப் பிரதிநிதி, அதற்கு இந்த நிதியாதாரங்கள் மிகவும் தேவை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

2009 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொடங்கி இதுவரை இரண்டு லட்சம் மக்கள் வடகிழக்கில் மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர் எனவும், அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது எனவும் நீல் பூனே கூறியுள்ளார்.

ஆனாலும், இன்னமும் 70,000 மக்கள் இடம் பெயர்ந்த நிலையிலேயோ அல்லது தமது இருப்பிடங்களுக்கு அருகில் வேறு ஒரு இடைத்தங்கல் முகாமிலேயோ இருப்பதாக தாங்கள் கணக்கீடு செய்துள்ளதாகவும் ஐ நா வின் பிரதிநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இன்னமும் 35,000 பேருக்கும் குறைவானவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் இன்னமும் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல மில்லியன் டாலர்கள் தேவை


ஐ நாவின் இலங்கை பிரதிநிதி நீல் பூண்
ஐ நா வின் இலங்கை பிரதிநிதி நீல் பூண்
இது வரை சர்வதேச அமைப்புகளிடமிருந்து 125 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்திருந்தாலும், இந்த ஆண்டின் எஞ்சியிருக்கும் காலப்பகுதியில் மட்டுமே, ஐ நா திட்டமிட்டுள்ள மனிதாபிமான பணிகளை முன்னெடுக்க 165 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றன எனவும் நீல் பூனே தெரிவித்துள்ளார்.

என்னதான் ஐநாவும் சர்வதேச அமைப்புகளும் உதவிப் பணிகளை முன்னெடுத்திருந்தாலும், இடம் பெயர்ந்த மக்களும், மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களும் இன்னமும் பலவீனமான நிலையிலேயே உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களின் வாழ்வாதாரங்கள் மீண்டும் முழுமையாக கிடைக்கப் பெறும் வரையில், அவர்கள் உதவி தேவைப்படும் நிலையிலேயே உள்ளனர் எனவும் ஐ நா வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Thursday, August 26, 2010


வைகோ
'போர் நிறுத்தத்தை தடுக்கவில்லை'
இலங்கைப் போரின் இறுதிக்கட்டங்களில் போர் நிறுத்தம் ஏற்படுவதைத் தடுத்தது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோதான் என்ற குற்றச்சாட்டினை வைகோ வன்மையாக மறுத்திருக்கிறார்.

இந்திய அரசின் முன்முயற்சி வெற்றி பெற்று, விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்துக்கு ஒத்துக்கொண்டிருந்தால், அது அன்று அஇஅதிமுக அணியில் இருந்த விடுதலைப் புலி ஆதரவு கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தேர்தல்களில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சியே வைகோ போர் நிறுத்தத்திற்கு உடன்படக்கூடாது என விடுதலைப்புலிகளை வற்புறுத்தினார் என அண்மையில் கேபி என்னும் குமரன் பத்மநாதன் ஒரு பேட்டியில் கூறியிருப்பது பொய்யான தகவல் என்று தான் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் வைகோ கூறியிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு நானோ, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் நெடுமாறனோ எந்த ஆலோசனையும் வழங்கவில்லை என்றும் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது எல்லோரையும்விட பிரபாகரனுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவரின் முடிவுக்கு தங்களால் ஆன உதவிகளை மட்டுமே செய்து வந்தோம் என்றும் வைகோ கூறீயுள்ளார்.

தவிரவும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்போதுமே போர் நிறுத்தத்திற்கு தயாராய் இருந்ததில்லை என்பது எல்லோருக்குமே தெரியும், அந்த நிலையில், தான் எப்படி அவருக்கு அத்தகையதொரு ஆலோசனையை வழங்க முன்வந்திருக்கமுடியும் எனவும் தனது அறிக்கையில் வைகோ வினவியிருக்கிறார்.

கே.பி இப்போது இலங்கை அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகக் கூறும் வைகோ, இடம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களிடத்தில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தவும், தமிழீழம் இனி சாத்தியமில்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் அவரை ஒரு கருவியாக இலங்கை அரசு பயன்படுத்தி வருகிறது என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

2002 இல் இலங்கை கடற்படையால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு பொறுப்புகளில் இருந்து பிரபாகரனால் நீக்கப்பட்டவர்தான் குமரன் பத்மநாதன் என்றும் அவர் எதிரிகளிடம் சென்று விடக் கூடாது என்பதற்காக சர்வதேச செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்றும் வைகோ கூறியிருக்கிறார்.

தவிரவும் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, தொகுதிப் பங்கீடு குறித்து சிக்கல் எழுந்ததால் போட்டியிடாமலே இருந்துவிடலாம் என்று தான் யோசித்துக்கொடிருந்தபோது, நடேசனே தன்னைத் தொடர்புகொண்டு போர் உக்கிரமாக நடந்துவரும் நிலையில் மதிமுக போட்டியிடுவது அவசியம், அதைத்தான் பிரபாகரன் விரும்புகிறார் என்று தன்னிடம் கூறியதாகவும் வைகோ கூறியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் பதவி தன்னை நாடிவந்தபோதும் அதை நிராகரித்த தான், உறுதியாக வெற்றி பெறமுடியும் என்று தெரிந்தும் 2004 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடாத தான், தேர்தல் வெற்றிக்காக இலங்கைத் தமிழர் நலனை பலிகொடுத்ததாகக் கூறுவது அவதூறு என்றும் அவர் கூறியிருக்கிறார்.


மிருக பலிச் சடங்கு நடந்தது
இலங்கையில் சிலாபத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் பிக்குமாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மிருக பலிச் சடங்கு நடந்து முடிந்துள்ளது.

இந்தச் சடங்கை நடத்தக் கூடாது என்று அகில இலங்கை பிக்குமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்து இன்று சிலாபம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தது.

ஆனாலும், அந்த ஆர்ப்பாட்டம் பொலிஸாரால் தடுக்கப்ப்பட்டது.

இந்த மிருக பலிச் சடங்கு பல காலமாக நடந்து வருவதாக பிபிசியிடம் கூறிய ஒரு ஆலய நிர்வாகி, உள்ளூர் மக்கள் இந்த சடங்குக்கு மிகுந்த ஆதரவைத் தந்ததாகவும், கூறினார். அது மாத்திரமின்றி அனைத்து மத மக்களும் இந்த வைபவத்தில் கலந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மிருக பலிச் சடங்கை அகில இலங்கை இந்து மாமன்றம் என்னும் அமைப்பும் கண்டித்திருந்தது.

ஆனால், இன்று ஆலயத்தின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பேச்சியம்மன் சிலைக்கு முன்பாக பக்தர்களால், மூன்று ஆடுகளும் சுமார் 7 கோழிகளும் பலியிடப்பட்டு, அவை அங்கேயே சமைக்கப்பட்டு வந்திருந்த அனைத்து இனமக்களுக்கும் பகிரப்பட்டதாக ஆலய நிர்வாகி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பஸில் ராஜபக்ஷவும் எஸ் எம் கிருஷ்ணா
பஸில் இந்திய விஜயம்
இலங்கையின் வடக்கே இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு அக்கறை காட்டுவதாக இலங்கை பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இந்தியா சென்றுள்ள பஸில் ராஜபக்ஷ அவர்கள், இன்று புதுடெல்லியி்ல பல்வேறு அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார்.

இன்று காலை, வேளாண் துறை அமைச்சர் சரத் பவார், சுற்றுலாத்துறை அமைச்சர் குமாரி ஷெல்ஜா ஆகியோரைச் சந்தித்தார். பிற்பகலில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் பிபிசி தமிழோசையிடம் பேசிய பஸில் ராஜபக்ஷ அவர்கள், தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்பட இரு நாட்டு உறவுகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மீள்குடியேற்றப் பணிகள் நடைபெறும் வேகம் போதுமானதாக இல்லை என்று இந்தியா அதிருப்தியுடன் உள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து அவரிடம் கேட்டபோது, ``இல்லை... இரு தரப்பும் திருப்தியுடன் இருக்கிறோம். நாங்கள் நிறையச் செய்திருக்கிறோம். அதே நேரத்தில் இன்னும் செய்ய வேண்டியதும் ஏராளமாக உள்ளது,’’ என்றார் பஸில்.

இன்னும் 14 ஆயிரம் மக்கள்தான் முகாம்களில் உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களும் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மீனவர் பிரச்சினை குறித்தும் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் விவாதித்ததாக அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மீனவர் விவகாரம்



சமீபத்தில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் சந்தித்துப் பேசியுள்ளது குறித்து சுட்டிக்காட்டி, அவர்கள் அளிக்கும் திட்டங்களை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்டபோது, கடந்த 2008 ஆம் ஆண்டு தான் இந்தியா வந்தபோதே, அந்தப் பிரச்சினையில் அரசை ஈடுபடுத்தாமல் மீனவர்களே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை தெரிவித்ததாக பஸில் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இன்று மாலை, இந்தியாவின் தேசிய பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனனையும் பஸில் ராபஜக்ஷ அவர்கள் சந்தித்துப் பேசினார்.
.

இதனிடையே, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் புதன்கிழமை இரவு புதுடெல்லி வந்து சேர்ந்தனர்.

நாடாளுமன்றத்தில் இலங்கை மீது புகார்

இதனிடையே, இலங்கையில் போர் முடிவடைந்து ஓராண்டுக்குப் பிறகும், இடம் பெயர்ந்த தமிழர்கள் இன்னும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்றும், அவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் நிலையும் பரிதாபகரமாக உள்ளதாகவும் இந்திய நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று, தமிழகக் கட்சிகளின் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.

அது குறித்து, இலங்கை செல்லும்போது அந்நாட்டு அரசுடன் தான் விவாதிக்க உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மறுவாழ்வு தொடர்பாக திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, இன்று மக்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

அப்போது அதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, இலங்கையில் தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்ய இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று உறுதியளித்தார்.

அப்போது குறுக்கிட்டு் பேசிய டி.ஆர். பாலு, இலங்கை அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்றும், இன்னும் 52 ஆயிரம் பேர் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிரு்பபதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய – இலங்கை உடன்பாட்டின்படி, 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்த இல்கை முன்வரவில்லை என்று குற்றம் சாட்டிய பாலு, சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ் அவர்கள் அளித்த ஒரு பேட்டியில், அரசியல் தீர்வு காண்பதற்கு அவசரம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாகவும், அரசியல் தீர்வு காணும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதை அது குறிப்புணர்த்துவதாகவும் பாலு புகார் கூறினார்..

தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்றிருந்தபோது, 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த 14 முகாம்களுக்கு மட்டும் தாங்கள் அழைத்துச்ச செல்லப்பபடவில்லை என்று குற்றம் சாட்டினார். அந்தச் சிறுவர்கள், விடுதலைப் புலிகளால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள் என்று தங்களிடம் அப்போது தெரிவிக்கப்பட்டதாகவும், அவ்வாறு இருந்தாலும் கூட அவர்கள் மனிதாபிமான அடிப்படையி்ல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா அதுபற்றிக் கவனிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா அளிக்கும் உதவிகள், இலங்கைத் தமிழ் மக்களுக்கு முறையாகச் சென்றடையவில்லை என்றும் பாலு புகார் கூறினார்.

இந்தப் பிரச்சினை குறித்து அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, மதிமுக உறு்ப்பினர் கணேசமூர்த்தி ஆகியோரும் கவலைகளை வெளிப்படுத்தினார்கள்.

பின்னர் அமைச்சர் கிருஷ்ணா பேசும்போது, தங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, இடைத்தங்கல் முகாம்களில் இன்னும் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியா வழங்கும் உதவிகள் தமிழ் மக்களைச் சென்றடைகிறதா என்பது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்ட்டுள்ள நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மூலம் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து மூத்த அதிகாரி ஒருவர் விரைவில் இலங்கை செல்லவிருப்பதாகவும், அவர் அங்குள்ள நிலையைத் தெரிந்துகொள்வார் என்றும் தெரிவித்தார்.

அதன் பிறகு தானும் அடுத்த மாதம் இலங்கை செல்லும்போது, அப்போது,. மூத்த அதிகாரி அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலும் இலங்கை அரசிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லவிருப்பாதகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

Wednesday, August 25, 2010


தொங்காரியா பழங்குடியினப் பெண்
மாபெரும் சுரங்கத் திட்டம் நிராகரிப்பு
பிரிட்டனின் வேதாந்தா நிறுவனம் ஒரிசாவில் அலுமினியத்தின் தாதுப் பொருளான பாக்சைட்டை தோண்டுவதற்கான அனுமதியை வழங்க இந்தியாவின் சுற்றுச் சூழல் அமைச்சு மறுத்துள்ளது.

இந்த நிறுவனம் சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ள நியமகிரி மலைப் பகுதிகளில் வாழும் இரு ஆதிவாசி குழுக்கள் இந்த திட்டத்தால் பாதிக்கப்படுவார்கள் என அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கனவே பரிந்துறைத்திருந்தது.

இந்த பகுதியில் வாழும் தொங்காரிய இன மக்கள் இந்த மலையை தமது கடவுளாகவே போற்றி வணங்கி வருகின்றனர்.

இதே நிறுவனம் ஒரிசாவில் மேற்கொள்ளும் வேறு சில திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டுவருவதாக சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இந்தத் திட்டங்களில் சுற்றுச் சூழல் விதிகள் மீறப்பட்டமை தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த மலைகளில் சுரங்கம் தோண்டப்படக் கூடாது என்று தொடர்ந்து போராடி வந்த சுற்றுச் சூழல் அமைப்புக்கள் அரசின் தற்போதைய முடிவை வரவேற்றுள்ளன.

வட கிழக்கு இந்தியாவில் வெள்ள பாதிப்பு
இந்தியாவின் வட கிழக்கே வெள்ளம்
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் ஐம்பது கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் வீடிழக்க நேரிட்டுள்ளது.

பிரம்மபுத்ரா நதியோடு சேருகின்ற ஆறு ஒன்று பெருக்கெடுத்து பல இடங்களில் ஊருக்குள் புகுந்ததில், கிராமவாசிகள் மேட்டு பகுதிகளுக்கு இடம்பெயர நேர்ந்துள்ளது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பருவமழை கடுமையாகப் பெய்ந்துவரும் நிலையில், ஆறுகளிலும் ஏரி குளங்களிலும் நீர் அபாயகரமான அளவுகளை எட்டியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேம்பட்ட உதவிகள் வேண்டும் என்று கோரி அஸ்ஸாம் மாணவர்கள் முக்கிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்துவருகின்றனர்.

கப்பலில் வந்த இலங்கை அகதிகள்

கப்பல் அகதிகளுக்கான காவல் நீட்டிப்பு
இலங்கைத் தமிழர்களைச் சுமந்து கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி கனடாவின் மேற்குக் கரையை வந்தடைந்திருந்த எம்.வீ.சன் சீ என்ற சரக்குக் கப்பலில் வந்தவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்குமாறு கனடாவின் சுயாதீன குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கப்பலில் வந்திருந்த 492 பேரில் 49 சிறார்கள் தவிர ஏனையோரின் தடுப்புக் காவலை நீட்டிப்பதாக குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் திங்களன்று வழங்கிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கப்பலில் வந்தவர்களுடைய அடையாள ஆவணங்களை ஆராய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக அரசாங்கம் கேட்டிருந்தது. அவர்களது கோரிக்கைக்கு இந்த சுயாதீன வாரியத்தின் அதிகாரிகள் உடன்பட்டுள்ளனர்.

இந்த உத்திரவின்படி, முன்னூற்று எண்பது ஆடவர்களும் அறுபத்து மூன்று பெண்களும் தொடர்ந்து தடுத்துவைக்கப்படுவார்கள். 49 சிறார்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்றாலும், சிறையில் உள்ள தமது பெற்றோருடனோ, பார்த்துக்கொள்வதற்கான பெரியவர்கள் இல்லை என்றால் சமூக சேவைகள் பராமரிப்பிலோதான் இவர்கள் வைக்கப்படுவார்கள் என அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில் தடுத்து வைக்கப்படுபவர்கள், கொஞ்சம் காலத்துக்கு ஒரு முறை கனடாவின் சுயாதீன குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தின் முன்பு தமது தடுப்புக் காவலை எதிர்த்து மனுச் செய்ய முடியும் என்பதாக கனடியச் சட்டம் அமைந்துள்ளது. அவர்களை விடுவிக்கச் சொல்லும் அதிகாரமும் இந்த வாரியத்துக்கு உண்டு.

தாய்லாந்திலிருந்து பயணத்தைத் துவங்கியிருந்த இந்த அகதிகள் முதலில் ஆஸ்திரேலியா செல்ல முயன்று அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் 90 நாட்களை கடல் பயணத்தில் கழித்து கனடா வந்தடைந்திருந்தனர்.

கடந்த ஒரு வருட காலத்தில் கனடாவை வந்து அடையும் இரண்டாவது தமிழ் அகதிக் கப்பல் இதுவாகும்.

விஸ்வநாதன் ஆனந்த்
ஆனந்திடம் கபில் சிபல் மன்னிப்பு

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை காரணமாக அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான நிகழ்ச்சி ரத்தானதற்காக மத்திய அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

விஸ்வநாதன் ஆனந்தின் குடியுரிமை தொடர்பாக இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.

அதற்காக, இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

ஆந்திர மாநிலம் ஹைதபாராத் நகரில், சர்வதேச கணிதவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. அதையொட்டி, அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் முடிவெடுத்தது.

அவ்வாறு பட்டம் வழங்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்ய வேண்டும். அதற்கு, பல்கலைக் கழகத்தின் விசிட்டர் என்ற முறையில், இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும்.

ஆனால், கடந்த ஜூலை மாதம், ஆனந்தின் இந்தியக் குடியுரிமை தொடர்பாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினார்கள். அதுதொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், அதுதொடர்பான ஆவணங்களையும் கேட்டார்கள். ஆனந்த் அவர்களின் மனைவி அருணா ஆனந்தும், பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.

சிறப்புப் பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கடைசி வரை, ஆனந்துக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பான ஒப்புதல், அமைச்சகத்திடமிருந்து வரவில்லை. அதையடுத்து, கடைசி நேரத்தில், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

அமைச்சர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து, கெளவப் பட்டத்தை ஆனந்த் ஏற்றுக்கொள்வாரா என்று அவரது மனைவி அருணா ஆனந்திடம் கேட்டபோது, ஆனந்துக்கு அடுத்த பிப்ரவரி மாதம் வரை செஸ் போட்டிகள் அதிக அளவில் இருப்பதால் அதுவரை சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.

Tuesday, August 24, 2010


பிரதமர் ஜூலியா கில்லார்ட்
ஆஸ்திரேலியா: அடுத்து யார் ஆட்சி?

சுயேட்சைகளிடம் ஆதரவு திரட்டுவதில் பிரதமர் ஜூலியா கில்லார்ட் ஈடுபட்டுள்ளார்
ஆஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு எந்தக் கட்சி ஆட்சியமைக்கும், யார் பிரதமராக வருவார் என்பதெல்லாம் இன்னும் நிச்சயமற்றதாகவே இருக்கிறது.

இரண்டு முக்கியக் கட்சிகளுக்குமே ஆட்சியமைக்க மேலும் ஒரு சில ஆசனங்களே தேவைப்படுகின்ற ஒரு சூழலில், யார் ஆட்சியமைப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கும் பலம் ஒரு சில சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளுக்கு வந்துள்ளது.

ஆட்சி செய்துவந்த தொழிற்கட்சி மீண்டும் அரசு அமைக்க தற்போதையப் பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு பசுமைக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள முதல் நபரான ஆடம் பேண்டின் ஆதரவு தேவைப்படும்.

ஆடம் பேண்ட் ஒருபால் உறவுக்காரர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் தொழிற்கட்சியின் கொள்கைகளுடன் நன்கு ஒத்துப் போகக்கூடியவர் இவர்.

பசுமைக் கட்சி எம்.பி. தாராளவாதக் கட்சிக்கு ஆதரவு தர வாய்ப்பில்லை என்று பசுமைக் கட்சி வட்டாரங்கள் குறிப்புணர்த்துகின்றன. ஆகவே இவரது ஆதரவு தொழிற்கட்சிக்கு கிடைத்துவிடும் என்று கருத இடமுண்டு.

ஆனால் நான்கு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு என்பதுதான் இப்போது பெரிய கேள்விக் குறியாக உள்ளது. இந்த சுயேட்சை உறுப்பினர்கள் எல்லாம் கிராமப் பகுதிகள் நிறைந்த பிராந்தியத் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள். கிராமப்புறங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தவர்கள்.

கடைசியில் எப்படியான முடிவு வருகிறது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

அர்ஜுன் அட்வால்
கோல்ஃப்: இந்திய வீரர் வெற்றி
வெற்றிக் கோப்பையுடன் அர்ஜுன் அட்வால்
அமெரிக்காவின் பிரபல சர்வதேச கோல்ஃப் பந்தயம் ஒன்றை வென்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அர்ஜுன் அட்வாலுக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

வடக்கு கரோலினாவில் நடந்த புகழ்மிக்க விண்தாம் சாம்பியன்ஷிப் (Wyndham Championship) கோல்ஃப் பந்தயத்தை அர்ஜுன் அட்வால் வென்றிருப்பது, காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை புது தில்லி நடத்த உள்ள இத்தருணத்தில், இந்திய விளையாட்டுத் துறைக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

அர்ஜுன் அட்வாலால் ஒரு தொழில்முறை சார் கோல்ஃப் வீரராக நீடிக்க முடியுமா என்ற ஒரு கேள்வி இந்த விண்தாம் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்தது.

உலகத் தர வரிசையில் போதிய அளவில் அவர் முன்னிலையில் இல்லை என்பதால், தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்றால்தான் அமெரிக்காவில் நடக்கக்கூடிய தொழில்முறைசார் கோல்ஃப் போட்டிகளில் இவர் பங்கேற்க முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்தப் விண்தாம் போட்டியை இவர் வென்றிருப்பதால், அடுத்த இரண்டு வருடங்களுக்கு தகுதிச் சுற்றுகளை விளையாடாமலேயே பி.ஜி.ஏ. போட்டிகளில் பங்கேற்க இவருக்கு தகுதி உண்டு.

இந்தப் பந்தயத்தில் அவர் பெற்றுள்ள பரிசுத் தொகை ஒன்பது லட்சத்து பதினெட்டாயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் நான்கு கோடியே இருபத்தியிரண்டு லட்ச ரூபாய் ஆகும்.

கல்கத்தாவில் பிறந்து தற்போது அமெரிக்காவின் ஃப்லொரிடாவில் வசித்து வரும் அர்ஜுன், இப்படி ஒரு போட்டியை வெல்வது தனது வாழ்க்கையின் லட்சியமாக இருந்ததென்று கூறியுள்ளார்.


இந்தியாவிலே நான் வளர்ந்த காலத்திலே அமெரிக்க பிஜிஏ பந்தயங்களையெல்லாம் இரவு வெகுநேரம் கண்விழித்து தொலைக்காட்சியில் பார்ப்பேன். நோர்மன், ஃபால்டோ போன்ற சிறப்பான வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு முழுக்க தூங்காமல் இருப்பேன்.

அர்ஜுன் அட்வால்

அர்ஜுன் அட்வாலின் இந்த வியத்தகு வெற்றி இந்திய விளையாட்டுத் துறைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்ற உற்சாக பானம் என்று கூறி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் அவரைப் பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் காலூன்றி வருகின்ற கோல்ஃப் விளையாட்டும் இந்த வெற்றியால் அங்கு பிரபலம் அடையும் என்று தெரிகிறது.

கோல்ஃப்: இந்திய வீரர் வெற்றி
வெற்றிக் கோப்பையுடன் அர்ஜுன் அட்வால்
அமெரிக்காவின் பிரபல சர்வதேச கோல்ஃப் பந்தயம் ஒன்றை வென்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அர்ஜுன் அட்வாலுக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

வடக்கு கரோலினாவில் நடந்த புகழ்மிக்க விண்தாம் சாம்பியன்ஷிப் (Wyndham Championship) கோல்ஃப் பந்தயத்தை அர்ஜுன் அட்வால் வென்றிருப்பது, காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை புது தில்லி நடத்த உள்ள இத்தருணத்தில், இந்திய விளையாட்டுத் துறைக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

அர்ஜுன் அட்வாலால் ஒரு தொழில்முறை சார் கோல்ஃப் வீரராக நீடிக்க முடியுமா என்ற ஒரு கேள்வி இந்த விண்தாம் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்தது.

உலகத் தர வரிசையில் போதிய அளவில் அவர் முன்னிலையில் இல்லை என்பதால், தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்றால்தான் அமெரிக்காவில் நடக்கக்கூடிய தொழில்முறைசார் கோல்ஃப் போட்டிகளில் இவர் பங்கேற்க முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்தப் விண்தாம் போட்டியை இவர் வென்றிருப்பதால், அடுத்த இரண்டு வருடங்களுக்கு தகுதிச் சுற்றுகளை விளையாடாமலேயே பி.ஜி.ஏ. போட்டிகளில் பங்கேற்க இவருக்கு தகுதி உண்டு.

இந்தப் பந்தயத்தில் அவர் பெற்றுள்ள பரிசுத் தொகை ஒன்பது லட்சத்து பதினெட்டாயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் நான்கு கோடியே இருபத்தியிரண்டு லட்ச ரூபாய் ஆகும்.

கல்கத்தாவில் பிறந்து தற்போது அமெரிக்காவின் ஃப்லொரிடாவில் வசித்து வரும் அர்ஜுன், இப்படி ஒரு போட்டியை வெல்வது தனது வாழ்க்கையின் லட்சியமாக இருந்ததென்று கூறியுள்ளார்.


இந்தியாவிலே நான் வளர்ந்த காலத்திலே அமெரிக்க பிஜிஏ பந்தயங்களையெல்லாம் இரவு வெகுநேரம் கண்விழித்து தொலைக்காட்சியில் பார்ப்பேன். நோர்மன், ஃபால்டோ போன்ற சிறப்பான வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு முழுக்க தூங்காமல் இருப்பேன்.

அர்ஜுன் அட்வால்

அர்ஜுன் அட்வாலின் இந்த வியத்தகு வெற்றி இந்திய விளையாட்டுத் துறைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்ற உற்சாக பானம் என்று கூறி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் அவரைப் பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் காலூன்றி வருகின்ற கோல்ஃப் விளையாட்டும் இந்த வெற்றியால் அங்கு பிரபலம் அடையும் என்று தெரிகிறது.


சர்வதேச நாணய நிதியம்
பாகிஸ்தான்-ஐ.எம்.எஃப் பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துவதற்காக பாக்கிஸ்தானின் மூத்த நிதித்துறை அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர்.

பாகிஸ்தானை நிலைகுலையச் செய்துள்ள பெரும் வெள்ளப்பெருக்கிற்கு முன்னர், அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த நிதி உதவி நிகழ்ச்சித் திட்டம் தொடார்பாக இவர்கள் விவாதிக்கவுள்ளனர்.

பாகிஸ்தானின் பொருளாதார மறுசீரமைப்புக்காக 11 பில்லியன் டாலர்கள் வரை கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே இணங்கியிருந்தது.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை உள்ளடங்கலாக அந்நாட்டின் பொருளாதார கொள்கைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த தொடர்ச்சியான மீளாய்வுகளுக்குட்பட்டு தவணையடிப்படையில் கடன் வழங்கும் ஐ.எம்.எஃப் இன் இந்த திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தொடங்கியிருந்தது.

ஆனால் அந்த வரவு செலவுத் திட்டத்தை தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் முற்றாக மாற்றியமைத்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

நாட்டின் விவசாய உற்பத்திகளின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. உதாரணத்திற்கு 25 வீதமான பருத்தி உற்பத்தி அழிக்கப்பட்டுவிட்டது.


பாகிஸ்தான் வெள்ளம்

இந்தப் பின்னணியில் அரசின் வரிவருமானத்திற்கும் பெரும் அடிவிழுந்துவிட்டது. அழிவுகளுக்கான மீள்நிர்மானம் மற்றும் இழப்பீட்டு செலவீனங்கள் வரவுசெலவு திட்டத்தின் பற்றாக்குறைத் தொகையை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

மீதமுள்ள தவணைக் கடனுதவிகளைப் பெறவேண்டுமானால், வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை தொடர்பில் குறைந்தளவு நிபந்தனையொன்றை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்தை உடன்படச்செய்ய வேண்டிய நிலையில் பாகிஸ்தான் தற்போது உள்ளது.

பாகிஸ்தானை திக்குமுக்காடச் செய்துள்ள தற்போதைய பெரும்வெள்ளத்தைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு உதவத்தயாராக உள்ளதாக ஐ.எம்.எஃப். இன் மூத்த அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
'விரைவான மீள்குடியேற்றம்': கோரிக்கை
இலங்கையில் இன்னமும் முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் ஐம்பதாயிரம் பேரை அவர்களின் சொந்த இடங்களில் விரை வில் குடியேற்றுவது குறித்தும், ஏற்கெனவே மீள்குடியேற்றப் பட்டவர்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களை உருவாக்கு வது குறித்தும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கத்தோலிக்க ஆயர்களின் குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடக்கும் கத்தோலிக்க ஆயர்களின் ஆண்டு கூட்டத்திற்காக நாடு முழுவதிலிருந்தும் வந்திருக்கும் கத்தோலிக்க ஆயர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஞாயிற்றுக்கிழமையன்று குழுவாக சென்று சந்தித்தனர்.

அந்த சந்திப்பின்போது, இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றிய இலங்கை அரசின் நடவடிக்கைக்கு கத்தோலிக்க ஆயர்கள் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதாக, இந்த குழுவில் சென்றிருந்த திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதேசமயம் மீள்குடியேற்றப்பட்டவர்களின் விவசாயம், மீன்பிடி போன்ற வாழ்வாதார தேவைகள், குடியிருப்பதற்கான வீடுகள் போன்றவற்றை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து தாங்கள் ஜனாதிபதியிடமும் அவருடன் இருந்த பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவிடம் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

மேலும் மீள்குடியேற்றம் நடந்த பகுதிகளில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவிகளின் கல்வித்தேவைகள், ஆசிரியர்களின் பணியிடத்தேவைகள் தொடர்பில் அரசின் உதவி உடனடியாக தேவைப்படுவதை தாங்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதா கவும் அவர் கூறினார்.

மேலும் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பவர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று தாங்கள் கோரியதாகவும் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள் தெரிவித்தார்.

Monday, August 23, 2010


ஜூலியா கில்லார்ட்
ஆட்சியமைக்கும் முயற்சியில் பிரதமர் ஜூலியா
ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து தொழிற்கட்சி வேட்பாளர் கூட்டணி ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தொழிற்கட்சியோ அல்லது அதனை எதிர்த்து போட்டியிட்ட லிபரல் தேசியவாத கூட்டுக்கட்சியோ ஆட்சியமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையை பெற்றுகொள்ள தவறியுள்ளன.

ஆட்சியமைக்க 76 ஆசனங்கள் தேவைப்படுகின்ற நிலையில், தொழிற்கட்சி 72 ஆசனங்களையும் லிபரல் தேசியவாதக் கூட்டுக்கட்சி 73 ஆசனங்களையும் கைப்பற்றும் என அந்நாட்டு தேசிய ஊடகமான ஏபிசி எதிர்வு கூறியுள்ளது.

இதுவரை எண்ணப்பட்டுள்ள 78 வீதமான வாக்குகளின்படி, தொழிற்கட்சி ஏற்கனவே 72 ஆசனங்களையும் லிபரல் கூட்டுக்கட்சி 70 ஆசனங்களையும் தக்கவைத்துக்கொண்டுள்ளன.

இந்த பின்னணியில், நிலையான அரசாங்கமொன்றை அமைக்கவே எதிர்பார்ப்பதாக தொழிற்கட்சி வேட்பாளர் பிரதமர் ஜூலியா கில்லார்ட் கூறியுள்ளார்.

ஆனால் தொழிற்கட்சி ஆட்சிக்கான தகுதியை இழந்துவிட்டதாக லிபரல் கட்சித் தலைவர் ட்டோனி அப்போர்ட் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரை பதவியிலிருந்து வெளியேற்றிய பின்னர் திடீர் தேர்தலொன்றுக்கு அறிவிப்பு விடுத்தமையே ஜூலியா கில்லார்ட்டை கடுமையாக பாதித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகின்றார்.


'மிருகபலி தடை வேண்டும்'-கோரிக்கை
முன்னேஸ்வரம் கோவில்-சிலாபம்

இலங்கையில் சிலாபம் பகுதியில் அமைந்துள்ள முன்னேஸ்வரம் ஆலயத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள பத்திரகாளியம்மன் தேவஸ்தானத்தில் மிருகங்கள் பலிகொடுக்கப்படும் நிகழ்வுக்கு இந்து மற்றும் பௌத்த மத அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மிருகங்களைப் பலியிடும் நடவடிக்கை இலங்கையில் அனுமதிக்கப்படக்கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றமும் பெளத்த பிக்குகளின் அமைப்பொன்றும் கோரியுள்ளன.

பல காலமாக தொடரப்பட்டு வருகின்றது என்பதற்காக மூட நம்பிக்கையான சடங்கொன்றை சரியானது என அங்கீகரிக்க முடியாது என அகில இலங்கை இந்துமாமன்றத்தின் செயலாளர் கந்தையா நீலகண்டன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மக்களின் நம்பிக்கைகள்

ஆனால் 13 தலைமுறைகளாக நம்பிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த வேள்வி இந்துமத வழிபாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் ஆலய பூசகர்கள் தெரிவிக்கின்றனர்.

பக்தர்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவே தாம் விரதமிருந்து பக்தியுடன் இந்த சடங்கினை ஆண்டுதோறும் நடத்திவருவதாக பத்திகாளியம்மன் ஆலய பூசகர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

மக்களின் நம்பிக்கைகளுக்கு முரணாக இந்த வேள்வியை நிறுத்தி வைப்பதில் தமக்கு சங்கடங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச மட்டத்தில் நடவடிக்கை

இந்த பிரச்சனை குறித்து அரசாங்க மட்டத்தில் ஆலய நிர்வாகிகளுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், மக்களின் நம்பிக்கைகள் காரணமாக அவற்றுக்கு பலன் கிட்டவில்லையென இந்து கலாசார திணைக்களம் தெரிவிக்கின்றது.

1982களில் அமைச்சர் இராஜதுரை அவர்களின் காலத்தில் மிருகங்களை பலியிடுவதை தடைசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சில காலங்களில் மீண்டும் பலியிடும் நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசு தமிழோசையிடம் கூறினார்.

கடந்த சில வருடங்களிலும் இதனை தடை செய்வதற்கான முயற்சிகள் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மிருகவதை தடைச்சட்டம் நாட்டில் ஏற்கனவே உள்ளதாகவும் எதிர்காலத்தில் ஆலயங்களில் மிருகபலியை தடைசெய்ய அமைச்சு மட்டத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடுவதாகவும் சாந்தி நாவுக்கரசு குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸின் கொடி
தனி ஆணைக்குழு தேவை-முஸ்லிம் காங்கிரஸ்
முஸ்லிம் மக்களுக்கு தனி ஆணைக்குழு வேண்டும் என மு கா கோருகிறது
இலங்கையில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தனியாக ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.

ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்னர் சாட்சியம் அளிப்பது குறித்து தாம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றாலும், அந்தக் குழு குறித்து தங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளது என அதன் பொதுச் செயலர் ஹசன் அலி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு 2002 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை இடம் பெற்ற நிகழ்வுகளிலிருந்து தான் பாடம் கற்றுக் கொண்டு இணக்கப்பாடு ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளது என்று சுட்டிக்காட்டும் அவர், அதற்கு முன்னரான காலகட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்துவதாகவும் கூறுகிறார்.

அரசு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இடம் பெற்ற பிரச்சினைகள் குறித்தே விவாதிக்க வேண்டும் எனக் கூறியுள்ள நிலையில், அந்த ஆணையத்தின் முன்னர் தமது தரப்பு கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமாக இருக்காது எனவும் ஹசன் அலி கருத்து வெளியிடுகிறார்.

2002 ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் எதிர்கொண்ட துன்பங்கள் குறித்து ஏதும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அரசு கருதியிருக்கலாம் எனவும் தான் நினைப்பதாக அவர் கூறுகிறார்.

“முஸ்லிம்களின் விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய பரிகாரங்களை வழங்குவதுதான் சரியான ஒரு அணுகுமுறையாக இருக்கும்” எனவும் தமிழோசையிடம் தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலர் ஹசன் அலி.

தற்போது செயற்பட்டு வரும் இந்த ஆணைக்குழுவின் அதிகார வரம்புகளை விரிவாக்கும் நோக்கில் ஜனாதிபதியுடன் விவாதிக்க தமது கட்சி எண்ணியுள்ளதாகவும் ஹசன் அலி கூறுகிறார்.

கற்றுக் கொண்ட படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யுத்தகாலம் முழுவதும் இடம் பெற்ற விடயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு எனவும் அவர் கூறுகிறார்.

மீனவர்கள்
இந்திய இலங்கை மீனவர்கள் இடையே உடன்பாடு
இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் இடைக்கால ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன்படி இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதற்கு சில விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மீனவர்கள் சங்க சம்மேளனத்தின் உறுப்பினரான சூரியகுமார்.

இந்த ஒப்பந்தத்தின்படி இந்திய மீனவர்கள் தொழிலை மேற்கொள்வதற்காக இருதரப்பு மீனவர்கள் மற்றும் அரசாங்கத்தை சேர்ந்தவர்களை கொண்டு ஒரு கண்காணிப்பு குழு உருவாக்கபடும் என்று அவர் கூறினார்.

இலங்கை மீனவர்களின் வளங்களை அழிக்காமல் அவற்றை காப்பாற்ற கூடிய வலைகளை கொண்டு மீன்களை பிடிப்பதற்கான அனுமதியை கொடுத்திருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் இது ஒராண்டு காலத்திற்கு இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு வருடத்திற்கு 70 நாட்கள் மட்டுமே இந்திய மீனவர்களின் ட்ராலர் படகுகள் இலங்கை எல்லைக்குள் நுழையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, August 21, 2010


வெள்ளத்தால் முழ்கிய ஊர்

இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் ஏற்றது
பாகிஸ்தானில் கடும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு உதவ இந்தியா அளித்த 5 மில்லியன் டாலர் உதவியை ஏற்றுக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

வரலாறு காணாத பெரும் வெள்ளத்தால் பாகிஸ்தான் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் வட பகுதியில் ஆரம்பித்த பெரும் மழை நாள்கள் செல்லச் செல்ல நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளிலும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணமாக அமைந்தன.

இந்த வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600 ஆக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் 2 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடிழந்துள்ளனர்.

பலவிதமான நோய்கள் பரவி பெரும் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்ற அச்சமும் அங்கே நிலவுகிறது. நிலைமையை சமாளிக்க பாகிஸ்தான் அரசு சர்வதேச உதவியை கோரியுள்ளது.

ஆனால் ஐ நா வின் மூலம் கோரப்பட்ட சர்வதேச நிவாரண நிதிக்கு முழு ஆதரவு கிடைக்கவில்லை. இது பற்றி வியாழக்கிழமை அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டத்தில், பிரிட்டன் தான் அளிக்கும் உதவியை இரட்டிப்பாக்குவதாக தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இந்தியா, 5 மில்லியன் டாலர்களை அளிக்க ஒரு வாரத்துக்கும் முன்பே முன்வந்தது. இதை ஏற்பது குறித்து பாகிஸ்தான் எவ்வித முடிவையும் தெரிவித்திருக்கவில்லை.

இந்நிலையில் இரு நாட்டுப் பிரதமர்களும் சில தினங்களுக்கு முன் தொலைபேசியில் உரையாடினர். இதையடுத்து அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷி இந்தியாவின் உதவியை ஏற்போம் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசுத் துறைப் பேச்சாளர், இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் ஏற்கும் என்றே அமெரிக்கா எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

இயற்கை பேரிடர் சம்மந்தப்பட்ட விடயங்களில் அரசியலுக்கு இடமில்லை என்று அரசுத் துறைப் பேச்சாளர் பி ஜே கிரவ்லி கூறியிருந்தார்.

நிலவில் அடையாளங் காணப்பட்டுள்ள பிளவுகள்

சுருங்குகிறதா நிலவு?-விஞ்ஞானிகள்
நிலவு சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் குறிப்புணர்த்துகின்றன.

சைன்ஸ் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆதாரமானது, நிலவின் மேற்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள பிளவுகளை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது.

நிலவின் உட்பகுதி குளிர்ந்துவருவதால் அதன் ஒட்டுமொத்த அளவும் சுருங்கிவருவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

பொருட்கள் குளிர்வடையும் போது அவை சுருங்கும் இயல்பை கொண்டிருக்கும் என்கின்ற போதிலும், சந்திரனில் இந்த மாற்றம் எவ்வளவு காலமாக நீடிக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சாதாரண கண்களால் பார்க்க முடியாத நிலவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை படம்பிடித்துள்ள கருவிகள், 14 புதிய பிளவுகளை கண்டறிந்துள்ளன.

கடந்து சென்ற பில்லியன் ஆண்டுகளில் நிலவு 100 மிட்டர் அளவு சுருங்கியுள்ளதாக நம்பப்படுகின்றது.

நிலவின் இந்த மாற்றம் சமீபகாலமாக ஏற்பட்டு வருகிறது என்றும், இது ஒரு தொடர் நிகழ்வு என்றும் கூறும் விஞ்ஞானிகள் இது பூமியை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் தெரிவிக்கின்றனர்.

தமிழ் அகதிகளைச் சுமந்து சென்ற படகு ஒன்று (கோப்புப் படம்)

ஆஸ்திரேலிய தேர்தலில் அகதிகள்
ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் குடிவரவு விடயமும், படகுகளில் தஞ்சம் கோரி வருகின்ற அகதிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ள விடயமும் மிக முக்கிய விவகாரமாக அமைந்துள்ளதென்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வரும் அகதிகளே ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலமாக அதிகளவில் செல்கின்றனர்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இவ்வாறாக அகதிகளாகச் சந்தேகிக்கப்படுவோரை ஏற்றிவந்த 80 கப்பல்கள் ஆஸ்திரேலிய கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

2008இல் நூறு பேருக்கும் குறைவாக இருந்த கடல் வழியாக வருகின்ற ஆட்களின் எண்ணிக்கை 2009இல் கிட்டத்தட்ட மூவாயிரமாகவும், இந்த ஆண்டு கிட்டத்தட்ட நான்காயிரமாகவும் அதிகரித்துள்ளது.

ஆளும் தொழிற்கட்சியின் கொள்கைகள் தோல்வியடைந்துள்ளன என்பதையே இது காட்டுகிறது என்பது எதிர்க்கட்சியான லிபரல் கட்சித் தலைவரின் வாதம்.

ஆனால் எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தும் அளவுக்கு அகதிகள் பிரச்சினை நிஜத்தில் பெரிய பிரச்சினையாக இல்லை என்று தொழிற்கட்சி வேட்பாளரும் தற்போதைய பிரதமருமான ஜூலியா கில்லார்ட் கூறுகிறார்.

ஆஸ்திரேலிய மக்கள் நினைக்கும் அளவுக்கு அந்நாட்டுக்கு அகதிகள் வரவில்லை என ஆஸ்திரேலிய அகதிகள் சபை என்ற அமைப்பின் தலைவரான பால் பவர் கூறுகிறார்.

உலகில் மற்ற மற்ற இடங்களோடு ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைகின்ற தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.

உலகில் தஞ்சம் கோருபவர்கள் அதிகம் நாடக்கூடிய இடங்களின் வரிசையில் ஆஸ்திரேலியா முப்பத்து மூன்றாவது இடத்தில்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்திய நாடாளுமன்றம்

இந்திய எம்.பி.க்கள் சம்பளம் உயர்வு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை 3 மடங்காக அதிகரிக்க இந்திய அமைச்சரவை இன்று காலை ஒப்புதல் அளித்தது. ஆனால், அந்த உயர்வு போதாது என்று பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, மாதம் 16 ஆயிரம் ரூபாயாக உள்ள சம்பளம், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுதவிர, தினப்படி, தொகுதி சுற்றுப்பயணப்படி, அலுவலக ஊழியர் ஊதியம், இலவச விமானப் பயணக் கட்டணம் உள்ளிட்ட பிற சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், அரசுத்துறைச் செயலர்களின் ஊதியத்தைவிடக் குறைவாக இருக்கிறது என்று உறுப்பினர்கள் புகார் கூறுகிறார்கள். அரசுத்துறைச் செயலர்களின் ஊதியம் 80 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் அதைவிட ஒரு ரூபாயாவது கூடுதலாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

வெள்ளி காலை மக்களவை கூடியதும், ஆர்ஜேடி, சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள், அமைச்சரவையின் முடிவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

நாடாளுமன்ற நிலைக்குழு 80,001 ரூபாய் வழங்க பரிந்துரை செய்துள்ள நிலையில், அரசு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருப்பது நியாயமில்லை என்று உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இது பெரிய அவமானம், இதை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும் என ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினார்கள். பின்னர், எங்கள் ஊதியத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள் என்று கோஷமிட்டவாறு, அவையின் மையப்பகுதிக்கு வந்தார்கள். இருக்கைக்குத் திரும்புமாறு மக்களவைத் தலைவர் விடுத்த வேண்டுகோளை அவர்கள் ஏற்கவில்லை.

கேள்வி நேரத்தை நடத்த விடாமல் அவர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அப்போதும், கூச்சல் நீடித்ததால் பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே, சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வுத் திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வந்தபோது, சில அமைச்சர்கள் அத்தகைய உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து, தற்போது இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

எதி்ர்ப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளமைக்கு சென்னை வாக்காளர்கள் பலர் தமது எதிர்ப்பை தமிழோசையிடம் தெரியப்படுத்தினர்.

ஏற்கனவே பல வசிதிகளை இலவசமாகப் பெறும் நாடாளுன்ற உறுப்பினர்களுக்கு இது போன்ற ஊதிய உயர்வு தேவையற்றது என்ற கருத்தை ஒருவர் முன்வைத்தார்.

தொகுதியை புறக்கணிக்கும் எம்.பி.க்களுக்கு இந்த அளவுக்கு ஊதியம் தேவையில்லை என்ற கருத்தை மற்றொறுவர் வெளியிட்டார்.

Friday, August 20, 2010



மூதூர் படுகொலை -"விசாரணை தேவை"


பிரேத பரிசோனைக்காக எடுக்கப்படும் கொல்லப்பட்டோரின் சடலங்கள்
இலங்கையின் கிழக்கே மூதூரில் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி முன்வைத்துள்ளது.
சர்வதேச மனித நேய தினத்தை ஒட்டி அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் விடுத்துள்ள அறிக்கையில் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூதூரில் இயங்கி வந்த ஏசிஎப் என்ற பிரன்ச் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 ஊழியர்கள் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் படுகொலை செய்யப்பட்டனர்.

இது பற்றி அந்த அமைப்பின் தெற்காசிய ஆய்வாளர் யோலண்டா பாஸ்டர் தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் பல வழக்குகளில் குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும், இந்நிலையில் இவ்வழக்கையும் இது போன்ற பிற வழக்குகளையும் பற்றி சர்வதேச சுயதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையை நடத்த ஐ நா சுயாதீன விசாரணை ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கோரி்ககையை தாம் ஆதரிப்பதாக மூதூரில் கொல்லப்பட்ட 17 பேரின் குடும்பத்தினருக்காக ஆஜராகிய வழக்கறிஞரான ரத்தினவேல் பிபிசியிம் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக பூர்வாக விசாரணைகள் சரியாக நடைபெறவில்லை என்று கூறிய ரத்தினவேல், காவல்துறையினரும், அரசும் குற்றம்சாட்டப்பட்டவர்களை வேண்டுமென்றே தப்பவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


இலங்கையில் அரசால் நியமிக்கப்படும் அடிவருடிகளால் நடத்தப்படும் விசாரணைகளில் எவ்வித நியாயமும் கிடைக்காது


வழக்கறிஞர் ரத்தினவேல்

இது தொடர்பான விசாரணைக் கமிஷன் கண்துடைப்பாக இருந்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத நிலை தொடர்வதாகவும் ரத்தினவேல் கூறினார்.

இலங்கையில் அரசால் நியமிக்கப்படும் அடிவருடிகளால் நடத்தப்படும் விசாரணைகளில் எவ்வித நியாயமும் கிடைக்காது என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை வேண்டும் என்று வரும் கோரிக்கைகளை இலங்கை அரசு தொடர்ந்து புறம்தள்ளி வருகிறது.

அதே நேரம் 2006 ஆம் ஆண்டு ஜனவரி முதல் துவங்கி 2007 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத காலப் பகுதி வரை இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிவந்த 67 பேர் கொல்லப்பட்டனர் அல்லது கடத்தப்பட்டனர் என்றும் அம்னேஸ்டியின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


"ஆதிவாசி பெண்கள் நிர்வாண ஊர்வலம்"


ஒரிசாவில் உள்ள இந்தியப் பழங்குடியினர்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஆதிவாசிப் பெண்கள் இருவர் ஆடை களையப்பட்டு பெருந்திரளானோர் முன்னிலையில் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பதை பொலிசார் உறுதிசெய்துள்ளனர்.
மாற்று ஜாதி ஆண்களுடன் நெருங்கிப் பழகியதற்காக அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரமும் இதேபோல வேறொரு பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அந்தப் பெண் நிர்வாணமாகக் கொண்டுசெல்லப்பட்டபோது சுற்றி நின்று பார்த்தவர்கள் அவரைக் கேலி செய்துப் படமெடுத்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தச் சம்பவம் பற்றிய வீடியோ படம் இணையதளம் ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஊடகங்களிலும் இந்த சம்பவம் குறித்த செய்திகள் அதிக அளவு வெளியானதை அடுத்து இது தொடர்பாக ஒரு விசாரணைக்கு உத்திரவிடப்பட்டிருந்தது.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஜாதி ரீதியான ஒடுக்குமுறைகளை தலித்துக்களும், ஆதிவாசிகளும் சந்தித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தை இடதுசாரிகள்தான் மூன்று தசாப்தங்களாக ஆண்டு வருகின்றனர்.

யாழ் மீனவர்கள்
இலங்கை மீனவர் சங்கத் தலைவருக்கு விசா மறுப்பு

தற்போது தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் இலங்கை மீனவர்களின் குழுவுக்கு தலைமை தாங்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த யாழ்மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் தலைவர் சின்னையா தவரட்ணம் இந்தியா வருவதற்கு இந்திய அரசு அனுமதி தர மறுத்து விட்டது.
இதனால்தான் தான்னால் இந்த பயணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று தவரட்ணம் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார்.

இப்போது மட்டுமல்லாமல், 2006 ஆம் ஆண்டும் தாம் இதே போல இந்தியா வர அனுமதி கேட்டதாகவும், அப்போதும் தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறும் தவரட்ணம் இதற்கான காரணம் என்ன என்று தமக்கு விளங்கவில்லை என்றும் கூறுகிறார்.

இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கான முயற்சியாக இருநாட்டு மீனவர்களையும் நேரடியாக சந்திக்க வைத்து அவர்களின் பிரச்ச்சினைகளை பேசி தீர்க்கும் முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயணத்திற்கு தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்ட தமக்கு அனுமதி மறுக்கப்பட்டது தமக்கு வேதனையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணி தலைவராக அறியப்பட்ட கேபி எனப்படும் குமரன் பத்மனாதன் அவர்கள் அமைத்திருக்கும் வடகிழக்கு புனர்வாழ்வுக்கவுன்சிலின் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதன் காரணமாக இவருக்கு இந்தியா அனுமதி மறுத்திருக்கக்கூடும் என்று வெளியான ஊடக செய்திகளை தவரட்ணம் மறுத்தார்.


தவரட்ணம் செவ்வி

குமரன் பத்மனாதன் தமது சகோதரர் என்றும், தனது மீனவர் சமுதாத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளை செய்யும் எந்த நபருடனும், அமைப்புடனும் சேர்ந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்றும் கூறிய தவரட்ணம், கே.பி.யுடனான தனது சந்திப்புக்கள் அனைத்தும் இலங்கை அரசின் அனுமதியுடனே செய்யப்பட்டதாகவும் கூறினார்.

இவருக்கு இந்திய பயண அனுமதி மறுக்கப்பட்டது குறித்து இலங்கையில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளின் கருத்துக்களை பெற நாம் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.


"இலங்கையில் எனக்கு நீதி கிடைக்காது"

இலங்கை அரசாங்கம் விரைவில் தன்னை சிறையில் அடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டதற்காக அரசாங்கம் தன்னைப் பழிவாங்கப் பார்க்கிறது என்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

தன்னை சிறையில் அடைத்து தனது அரசியல் எதிர்காலத்தை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் திட்டமிடுகிறது என்று பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

இராணுவ வீரர்களால் வியாழனன்று நாடாளுமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்த சரத் ஃபொன்சேகா, தன்னை அரசாங்கம் சிறையில் அடைக்கப்போகிறது என்று கூறினார்.

இலங்கையின் நீதித்துறை மீது தனக்கு நம்பிக்கையில்லையென்றாலும், தன் மீது விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து தான் மேல்முறையீடுகள் செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.

"எங்கு போய் முறையிட்டாலும் எனக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பது எனக்கு நூறு சதவீதம் தெரியும். அது பற்றி எங்களுக்கு கவலையில்லை. எது வந்தாலும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்", என்றார் அவர்


பாதுகாப்புச் செயலரின் மனோபாவம் எப்படிப்பட்டது என்று எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் எப்படி பதில் தருவார்கள், அவர்கள் எப்படிப் பழிவாங்குவார்கள், அவர்கள் எனக்கு என்னவெல்லாம் செய்வார்கள் என்பது பற்றி யோசித்த பின்னர்தான் நான் எனது இராணுவச் சீருடையே களைந்திருந்தேன்.


சரத் பொன்சேகா

கடந்த ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து கைதுசெய்யப்பட்டிருந்த ஃபொன்சேகா இராணுவத் தடுப்புக் காவலில் இருந்து வருகிறார்.

தேசதுரோகம் தொடங்கி ஊழல் வரையில் என்று பல விதமான குற்றச்சாட்டுகளின் பேரில் இராணுவ நீதிமன்றத்திலும் சிவில் நீதிமன்றங்களிலும் அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நடந்துவருகின்றன.

இராணுவத்தில் இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ நீதிமன்றத்தில் நடந்த முதல் வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டு தண்டனையாக சரத் ஃபொன்சேகாவின் இராணுவ அந்தஸ்துகளும் பதக்கங்களும் அண்மையில் பறிக்கப்பட்டிருந்தன.

இராணுவத்தில் இருந்த சமயத்தில் ஊழலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் மீதான இரண்டாவது இராணுவ நீதிமன்ற வழக்கின் அடுத்த விசாரணை வரும் சனிக்கிழமை நடக்கவுள்ளது.

இராணுவத்தை விட்டு ஓடிப்போனவர்களைப் பயன்படுத்தினார், தேச இரகசியங்களை வெளியில் கசியவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளது. இவற்றில் சில குற்றங்களுக்கு இருபது ஆண்டுகள் வரையில்கூட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Thursday, August 19, 2010


போட்டிகளின் தலைவர் புதுடில்லி விஜயம்


போட்டிகளின் தலைவர் விளையாடு அரங்குகளை காணவுள்ளார்
காமன்வெல்த் கேம்ஸ் விளையாட்டுப் போட்டிகள் அமைப்பின் தலைவர் மைக் ஃபென்னல் அந்தப் போட்டிகளுக்கான கடைசி நிமிட தயார்படுத்தல்கள் குறித்து நேரில் பார்வையிடுவதற்காக புதுடில்லி சென்றுள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ள மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகளான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.

புதுடில்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் ஆகிய பிரச்சினைகளில் சிக்கியுளள் நிலையில், அவரது விஜயம் அமைந்துள்ளது.

இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், புதுடில்லியில் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை முடிப்பதற்கு குறைந்த அளவே கால அவகாசம் உள்ளது.

இரண்டு நாள் விஜயமாக புதுடில்லி சென்றுள்ள மைக் ஃபென்னல், போட்டிகளுக்கான விளையாட்டு அரங்குகளை பார்வையிடவுள்ளார். அவற்றில் இன்னமும் சில முடிக்கப்படாமல் இருக்கின்றன அல்லது தேவையான பாதுகாப்பு சான்றிதழ்கள் இல்லாத நிலையில் உள்ளன.

போட்டிகள் தொடர்பாக எழுந்துள்ள ஊழல் புகார்களும் பெரும் கவலைகளை எழுப்பியுள்ளன.

இந்த மாதத்தின் முற்பகுதியில் போட்டிக்கான ஏற்பாட்டு குழுவின் இரண்டு அதிகாரிகள் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போட்டி தொடர்பில் முறையான கலந்துரையாடல்கள் மற்றும் கையெழுத்திடப்படாமல், பல ஒப்பந்தங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரும் தொகைக்கு வழங்கப்பட்தாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்தப் போட்டிகள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து, போட்டிகளை மேற்பார்வையிடுவதற்கு அமைச்சர்களை கொண்ட ஒரு புதிய குழு அமைக்கும் நிலை இந்திய அரசுக்கு ஏற்பட்டது.

இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு பெரிய இடத்து ஆதரவும் இருக்கின்றது. இந்தப் போட்டிகளை புதுடில்லி சிறப்பாக நடத்தும் என தான் கருதுவதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்ஸினின் தலைவர் ழாக் ரக்கர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் எதையுமே சாதகமாக பார்ப்பதில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.