
வரைபடத்தில் சம்பவம் நடந்த மாவட்டம்
தண்டனையாக நிர்வாண ஊர்வலம்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆதிவாசிப் பெண் ஒருவர் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தூரம் நிர்வாணமாக அழைத்து வரப்பட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கப்போவதாக அம்மாநில மகளிர் நல வாரியம் அறிவித்துள்ளது.
அந்தப் பெண் அவ்வாறு நடந்து வருகையில் சுற்றியிருந்த சிலர் அவரை தகாத முறையில் இம்சித்துள்ளனர், வேறு சிலர் கேலி பேசியுள்ளனர்.
ஒரு சிலர் இந்த சம்பவத்தை ஒளிப்பதிவும் செய்துள்ளனர்.
வேறு ஜாதி ஆணுடன் உறவு வைத்திருந்தார் என்பதற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்த சம்வம் நடைபெற்றவுடன் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும், உள்ளூர் அதிகாரிகளும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தற்போதைய விசாரணை ஆராயும்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க