
இந்திய ரூபாய் நோட்டு
வருமான வரித்துறை தேடுதல்
தமிழ் நாட்டைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பல தனியார் கல்வி நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் வீடுகளில் வெள்ளிக்கிழமை வருமான வரித்துறையின் புலனாய்வுத்துறையினர் ஒரே சமயத்தில் திடீர் சோதனைகளை நடத்திவருவதாகத் தெரிகிறது.
தமிழ் நாட்டுக்கு வெளியேயும் இந்த தனியார் கல்வி நிறுவனங்களின் அலுவலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
தொடர்ந்து நடந்து வரும் இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய்கள் பணம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சோதனைகளின் தற்போதைய விவரங்கள் குறித்து, சென்னையில் இருக்கும் வருமானவரித்துறையின் புலனாய்வுப்பிரிவின் கூடுதல் இயக்குநர் ரவிச்சந்திரன் அவர்கள் தமிழோசைக்கு தகவல் தெரிவிக்கும்போது, இந்த சோதனைகளில் கணக்கில் வராத நன்கொடைப் பணம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
சென்னையில் இருக்கும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது தவிர கோயம்புத்தூரில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட சோதனையிலும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சோதனைகள் தொடர்வதாகவும் , நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க