இலங்கையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாயின
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாநகர சபைக்கும் ஊவா மாகாண சபைக்கும் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. வவுனியா நகரசபையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையை பொறுத்த வரையில் 20 சதவீதத்துக்கும் குறைவான மக்களே வாக்களித்திருந்தனர்.
இதில் பதிவான வாக்குகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 50.67 சதவீத வாக்குகளை பெற்று 13 இடங்களை வென்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 38.28 சதவீத வாக்குகள் பெற்று 8 இடங்களை வென்றுள்ளது.
இது தவிர சுயேட்சை குழுவும், தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியும் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
வவுனியா நகர சபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில். அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக வாக்குகளை பெற்று 5 இடங்களை வென்றுள்ளது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 3 இடங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 2 இடங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகள்
இதற்கிடையே பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாண சபைக்கான தேர்தலிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
34 இடங்களை கொண்ட இச்சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி 72 சத வீத வாக்குககளைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் இரண்டு போனஸ் இடங்கள் உட்பட 25 பேரும், 22 சத வீத வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 7 பேரும் தேர்வாகியுள்ளனர். அதே நேரம் மலையக மக்கள் முன்னனி மற்றும் ஜே.வி.பி. சார்பில் தலா ஒருவரும் தேர்வாகியுள்ளனர்.
செல்வராசா பத்மநாதனை சட்டவிரோதமாக கைது செய்திருப்பதாக குற்றச்சாட்டு
செல்வராசா பத்மநாதன்
இலங்கையில் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு, வெளிநாட்டிலிருந்த தமது புதிய தலைவரை இலங்கை அரசு சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
செல்வராசா பத்மநாதனை ஆசிய நாடொன்றில் கைது செய்தள்ளதாக கடந்த வெள்ளி்க்கிழமை அறிவித்த இலங்கை அதிகாரிகள், பிரிவினைவாதிகள் எதிர்காலத்தில் தலைதூக்குவதற்கான சாத்தியத்தை இல்லாது ஒழிக்கக்கூடிய வல்லமை தமக்குள்ளதை இந்த நடவடிக்கை வெளிக்காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் பத்மநாதன் மலேசியாவிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து கடத்தப்பட்டதாக தெரிவித்த விடுதலைப்புலிகள், அவர் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அவரைக் காப்பாற்றுவதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கைது மலேசிய மண்ணிலா இடம்பெற்றது என்பதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தவும் இல்லை மறுக்கவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூவில் திருவள்ளுவர் சிலை திறப்பு
திருவள்ளுவர்
இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் பல ஆண்டு கால சர்ச்சைக்கு பின்னர் திருவள்ளுவர் சிலை தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை திறப்புக்கு கடந்த காலங்களில் கன்னட அமைப்புகள் சிலவற்றினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தன.
பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எதிர்வரும் 13 ம் தேதி சென்னையில் கன்னட கவிஞர் சர்வஞ்னர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்த சிலை திறப்பு விழாவில் பெரிய அளவில் சமூக அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக தாம் கருதவில்லை என்று பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஒய்வுப்பெற்ற சமூகவியல் பேராரசிரியர் ஜிஎஸ்ஆர் கிருஷ்ணன் தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் கடந்த காலங்களில் இரண்டு மூன்றுமுறை சிலையை நிறுவ வேண்டும் என்று விரும்பி அது நடைபெற முடியாமல் அதற்கு பெங்களூருவில் எதிர்ப்பு எழுந்ததால் தற்போதைய சிலை திறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறுகிறார்.
கர்நாடகத்தில் திருவள்ளுவரை தெரிந்த அளவுக்கு தமிழகத்தில் சர்வஞ்னரை பற்றி தெரிந்து இருக்காது என்று கூறும் அவர் சர்வஞ்னரும் திருவள்ளுவரை ஒத்த ஒரு சிந்தனையாளர் தான் என்றும் வாழ்க்கை நெறிகளை வள்ளுவரை போலவே இரண்டு அடிகளில் பாடியவர் என்றும் அவர் கூறுகிறார்.
இது குறித்து அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
நெஞ்சம் மறப்பதில்லை
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>
உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள
//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க