>> Tuesday, March 31, 2009
Home
News
Sport
Radio
TV
Weather
Languages
உதவி
எழுத்து மட்டும்
தமிழோசையை எனது தொடக்கப் பக்கமாக்குக
முகப்பு
நினைவில்நின்றவை
வானிலை
------------
வானொலி
நிகழ்ச்சி நிரல்
அலைவரிசை
------------
சேவைகள்
எம்மைத் தொடர்புகொள்ள
எம்மைப் பற்றி
RSS என்றால் என்ன?
------------
பிறமொழிகள்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 மார்ச், 2009 - பிரசுர நேரம் 18:02 ஜிஎம்டி
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
செய்தியரங்கம்
இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவ்சங்கர் மேனன்
தமிழோசை
'மோதல் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை இந்தியா வரவேற்கும்'- சிவ்சங்கர் மேனன்
இலங்கையில் வடபகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் தாக்குதல்களை இடைநிறுத்தி அங்கு அகப்பட்டுள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் டெல்லியில் தெரிவித்திருக்கிறார்.
மோதல் பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில், ஒரு தாக்குதல் நிறுத்தம் உட்பட பல வழிவகைகள் குறித்து ஆராய தாம் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதாக அண்மையில் வரும் செய்திகளை இந்தியா வரவேற்கின்றது என்றார் சிவ்சங்கர் மேனன்.
இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சிவ்சங்கர் மேனன் அவர்கள், அவருடைய விஜயம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று கூறினார்.
நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய ஒரு அரசியல் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும் என்பது குறித்து முக்கியமாக அந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தரப்பினருடன் நாயர் அவர்கள் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை, போரில் அகப்பட்டுள்ள மக்களுக்கான மனித நேயப் பணிகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் அவர் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் விவாதித்ததாகவும் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
வட இலங்கையில் தரையிலும் கடலிலும் மோதல்
முல்லைத்தீவில் மோதலில் அகப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் பகுதிஇலங்கையின் வடக்கே தரை மற்றும் கடற்பரப்பில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 55 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
முல்லைத்தீவு சாலையோரக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் படகுகள் மீது கடற்படையினர் நேற்று நள்ளிரவும், இன்று அதிகாலையிலும் நடத்திய இரண்டு வெவ்வேறு தாக்குதல்களில் 26 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதுடன், விடுதலைப்புலிகளின் 4 படகுகளும் தாக்கியழிக்கப்பட்டிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.
இந்தச் சண்டைகளில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஓர் அதிகாரி உட்பட 3 கடற்படையினர் காயமடைந்திருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறியிருக்கின்றார்.
இதேவேளை, முல்லைத்தீவு பழமாத்தளனுக்கு வடக்கே விடுதலைப்புலிகளின் பதுங்கு குழியொன்றின் மீது படையினர் இன்று காலை தாக்குதல் நடத்திய வண்ணம் முன்னேறிய போது, அங்கு பதுங்கியிருந்த விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் அணியைச் சேர்ந்த ஒருவர் குண்டை வெடிக்கச் செய்து மரணமடைந்ததாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
எனினும் இந்தச் சண்டைகள் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
விடுதலைப்புலிகளின் வசமிருந்த பல பிரதேசங்களை இராணுவத்தினர் கைப்பற்றி முன்னேறி வரும் அதேவேளை, விடுதலைப்புலிகளை 25 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய சிறிய நிலப்பகுதியில் ஒடுக்கியிருப்பதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
இந்தப் பிரதேசத்தின் உள்ளே சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு வலயம் ஒன்றை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. எனினும் இந்தப் பாதுகாப்பு பிரதேசத்தினுள்ளே இருந்து பொதுமக்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு, விடுதலைப்புலிகள் இராணுவத்தின் தாக்குதல் நடத்துவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகின்றது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மீது இராணுவத்தினரே தாக்குதல் நடத்துவதாகக் கூறுகின்றார்கள்.
புதுமாத்தளனில் இருந்து மேலும் நோயாளர்கள் கப்பலில் புல்மோட்டை வந்தனர்
ஏற்கனவே கொண்டுவரப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றதுகிறீன் ஓசன் கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மற்றும் ஒரு தொகுதியினர் இன்று புல்மோட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
544 பேர் இவ்வாறு கப்பல் மூலம் கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் புதுமாத்தளனிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் சிறிது நேரத்துக்கு முன்னதாக புல்மோட்டையை வந்தடைந்துள்ளது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் ஈச்சிலம்பற்று பகுதியில் வைத்து 22 வயதான இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பின்னிரவு வேளை இந்த இளைஞர் உணவகம் ஒன்றின் அருகே நின்றிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதபாணி ஒருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
மூதூரை அண்டிய பிரதேசத்தில் கடந்த வார இறுதியில் மூவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
படங்களில்: மும்பை தாக்குதல்
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>
உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள
//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>
0 comments:
Post a Comment