>> Monday, July 22, 2013

'வட-இலங்கை முதலமைச்சரை தீர்மானிப்பது நான் தான்': டக்ளஸ்

ஈபிடிபி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
'வடக்கு மாகாணசபைத் தேர்தல் எனது கனவு': டக்ளஸ் தேவானந்தா
இலங்கையில் வட மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சராக வர வேண்டியவரை தீர்மானிக்கும் அதிகாரமும் தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருப்பதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கு தேர்தல் பிரச்சாரங்கள் தனது தலைமையிலேயே நடப்பதாகவும் தனது தீர்மானத்தின்படியே முதலமைச்சர் பதவி அமையும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறினார்.


வடக்கு மாகாணசபைத் தேர்தல் தனது நீண்டகால கனவு என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான முயற்சிகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழேயே போட்டியிடும் தீர்மானத்திற்கான காரணம் பற்றியும் பிபிசி தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் டக்ளஸ் இந்தக் கருத்தினைக் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்ட தயா மாஸ்டரும் ஆளும் அரச கூட்டணியில் போட்டியிடுகிறார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்துகொண்ட தயா மாஸ்டரும் ஆளும் அரச கூட்டணியில் போட்டியிடுகிறார்
ஏற்கனவே மத்தியில் ஆளும் அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகிப்பதாலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மாகாணசபை தேர்தலில் போட்டியிட விரும்பாத படியாலேயே ஆளும் கூட்டணியின் கீழ் போட்டியிட இணங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தமது கட்சி தனித்துவத்துடனேயே இயங்கவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
அரசாங்க கூட்டணியில் இருப்பதன் மூலமே வடக்கு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆளும் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் சுதந்திரக் கட்சியில் புதிதாக இணைந்துகொண்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரையும் இன்னும் பலரையும் அக்கட்சி வட-இலங்கை தேர்தலில் களம் இறக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

>> Thursday, July 11, 2013


இந்தியாவில் இனி குற்றவாளிகள் யாரும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது

மீடியா பிளேயர்


இந்திய உச்சநீதிமன்றம்
இந்தியாவில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள யாரும் இனி சட்டமன்றத்திலோ நாடாளுமன்றாத்திலோ பதவி வகிக்க முடியாது என்று இன உச்சநீதிமன்ற்ம் தீர்ப்பளித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலுள்ள பிரிவு 8(4) கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்கு செல்லுபடியாகாது என்று நீதிபதிகள் ஏ கே பட்நாயக் மற்றும் எஸ் ஜே முகோபாத்யாய அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தால் வழக்கு ஒன்றில் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவர் உடனடியாக பதவியிழப்பார் என்று நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாகக் கூறினாலும் அந்த நபர் இந்தத் தீர்ப்பின்படி பதவியிழப்பார்.
எனினும் இந்தத் தீர்ப்பு தங்களது இன்றையத் தீர்ப்பு வருவதற்கு முன்னர் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

"வரவேற்கத்தக்கத் தீர்ப்பு"

இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்றும், இதன் மூலம் இனி வரும் தேர்தல்களில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் அல்லது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்க கட்சிகள் தயங்கும் என்றும் இந்தியாவின் ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையாளர் என் கோபாலஸ்வாமி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அடுத்த சில மாதங்களில் தற்போது பதவியிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கினால் அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்திலுள்ள ஒரு பிரிவுக்கான விளக்கம் என்பதால் இதை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஒரு சிறப்புச் சட்டத்தை கொண்டுவரவும் முடியாது என்றும் கோபாலஸ்வாமி தெரிவித்தார்.

Read more...


சீதைக்கு இலங்கையில் கோயில் : ம.பி அரசின் திட்டம்

இலங்கையில் நுவரெலியா அருகே ராமாயண நாயகி சீதைக்கு ராமன் அக்கினி பரீட்சை செய்த்தாகக் கூறப்படும் இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் சீதைக்கு ஒரு கோவில் கட்ட மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்து, இலங்கை அரசின் அனுமதியைப் பெற்றிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
இந்தக் கோவிலுக்கான திட்ட வரைபடம் கூட தயாராகிவிட்டதாக இன்று பத்திரிகை செய்தி ஒன்று கூறுகிறது
இதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டதா என்று தெளிவாகத் தெரியாத நிலையில், இது போன்ற ராமாயணத்துடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் இலங்கையின் சில இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த இலங்கையின் சுற்றுலாத்துறை சில ஆண்டுகளுக்கு முன்னர் சில நடவடிக்கைகளை எடுத்தது.


இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவிருந்த , இலங்கை உல்லாசப் பயணத்துறையின் ஓய்வு பெற்ற பணிப்பாளர் நாயகம் ஸ்ரீநிவாசன் கலைச்செல்வம் தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், இது போன்ற ராமாயணத்துடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் பல இடங்கள் இலங்கை அரசின் சுற்றுலாத்துறையால், இந்தியாவில் பிரபலப்படுத்த முயற்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்டன. இதன் பலனாக இந்தியாவிலிருந்து இந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்றார்.
ராவணன் சிவபெருமானை வழிபட்டதாகக் கருதப்படும் திருகோனேஸ்வரன் கோயில், சீதை சிறை வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் இடம், ஹனுமான் சஞ்சீவி பர்வதத்திலிருந்து, போரில் காயம் பட்ட லக்ஷமணனைக் காப்பாற்ற மூலிகைகளை கொண்டு வந்தபோது , இலங்கையின் ஐந்து இடங்களில் அந்த மூலிகைச் செடிகள் சிந்தியதாகக் கருதப்படும் இடங்கள் ஆகியவை இது போல சுற்றுலாத்துறையால் பிரபலப்படுத்தப்பட்டன என்றார் அவர்.

பேராசிரியர் பத்மநாதன் பேட்டி


இலங்கை அரசு ராமகாதையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களை இவ்வாறு சுற்றுலாப் பயணிகளைக் கவர பயன்படுத்தும் நிலையில், இலங்கையில் ராமர் மற்றும் சீதை வழிபாடு குறித்து சமூகத்தில் இருக்கும் நிலை குறித்து இலங்கையின் யாழ்ப்பாண மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களில் வரலாற்றுத்துறையின் பேராசிரியராகப் பணியாற்றியவரும். தற்போது கிழக்குப் பல்கலைகழகத்தில் வரலாற்றுத்துறையை நிறுவிக்கொண்டிருப்பவருமான, பேராசிரியர் பத்மநாதன், குறிப்பிடுகையில், பொதுவாக இலங்கையில் ராமர் சீதை வழிபாடு என்பது தமிழர்கள் மத்தியில் வரலாற்று ரீதியில் பெரிய அளவில் இல்லை. பொளத்த சமூகத்திலும் இது இல்லை என்றார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter