Saturday, December 6, 2014

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன
மைத்திரிபால சிறிசேன
பிபிசிக்கான பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும், தமிழர்களின் பிரச்சினை இன்னமும் தீரவில்லை என்றும் அதேவேளை முஸ்லிம்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் கூறி, இந்த சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான பொதுவேட்பாளரின் திட்டம் என்ன என்று பிபிசியின் சரோஜ் பத்திரன கேட்ட கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறுசேன அவர்கள், தமது முதல் 100 நாட்களுக்கான நடவடிக்கை திட்டத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து உள்ளடக்கப்படவில்லை என்றும், தேர்தலின் பின்னர் அமைக்கப்படவிருக்கும் தேசிய அரசாங்கமே அதனை ஆராயும் என்றும் குறிப்பிட்டார்.
''எமது கூட்டணியில் பல அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களது கட்சி, ஹெல உறுமய என பல அரசியல் கட்சிகள் எங்கள் அமைப்பில் உள்ளன. அதனை விட பல பொது அமைப்புக்களும் அதில் அடங்குகின்றன. எங்களது கூட்டணியில் செயற்திட்டமாக 100 நாட்களுக்கான திட்டம் ஒன்றை நாங்கள் ஏற்கனவே பிரசுரித்திருக்கிறோம். இந்த 100 நாள் திட்டத்தில், நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழித்தல், அரசியலமைப்பில் மாற்றங்களை செய்தல் மற்றும் வறிய மக்களின் நலன்களுக்கான பொருளாதார மறுசீரமைப்பு ஆகியன அடங்கியுள்ளன. எமது 100 நாள் திட்டத்தில் இவை மாத்திரந்தான் இருக்கின்றன. இதில் ஏனைய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. ஆனால், தேர்தலுக்கு பின்னர் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியவாறான ஒரு தேசிய அரசாங்கத்தை நாங்கள் அமைப்போம். அந்த அரசாங்கந்தான் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும்.'' என்றார் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன.

Friday, October 24, 2014

காலை 6.00 மணிக்கு வைகறை வணக்கத்தில் இடைக்கால பாடல்களை வழங்கினால் நன்றாக இருக்கும்...நிகழ்ச்சிக்கு அதுதான் பொருத்தமாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து...செய்வீர்களா?
விசயமங்கலம் குணசீலன்.


Friday, August 8, 2014

வேரித்தாஸ் வானொலி உறவு சங்கம விழா சிறப்பாக நடை பெற எமது வாழ்த்துக்கள்...

விசயமங்கலம் குணசீலன்

Wednesday, July 30, 2014

30.07.2014

சுற்றுசுழல்

நம் வீட்டு குப்பைகளை  எரிக்காமல் புதைப்பதே நல்லது ...இதனால் சுற்றுசுழல் மாசுபடாது என்பதை மிக விரிவாக எடுத்துரைத்த அய்யாவுக்கு நன்றி ...
விசயமங்கலம் குணசீலன்

Wednesday, July 16, 2014

மத்தியகிழக்கில் போர்நிறுத்த முயற்சி தோல்வி; சண்டைகள் மீண்டும் ஆரம்பம்


ஒருவார இஸ்ரேலிய தாக்குதலில் காசாவில் பல கட்டிடங்கள் நிர்மூலம் ஆகியுள்ளன
காசாவில் பாலஸ்தீன ஆயுததாரிகளின் நிலைகள் இருபதுக்கும் மேலானவற்றை தாம் வான் தாக்குதல் நடத்தி அழித்திருப்பதாக இஸ்ரேலிய ஆயுதப்படைகள் கூறுகின்றன.
ஹமாஸும் இஸ்ரேல் மீது தொடர்ந்து ரொக்கெட் குண்டுகளை வீசி வருகிறது.
போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு எகிப்து முன்மொழிந்த யோசனை பலனளிக்காமல் போன நிலையில் இந்த புதிய மோதல்கள் நடந்துள்ளன.
காசாவிலுள்ள பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸுடன் கடந்த ஒருவாரமாக இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்த யோசனைக்கு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இஸ்ரேலிய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்திருந்தது.
ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு இந்த யோசனையை, சரணடைவதற்குச் சமம் என்று வர்ணித்து நிராகரித்திருந்தது.

எகிப்து முன்மொழிந்த போர்நிறுத்த யோசனை - ஒலிப் பெட்டகம்


இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள ஹமாஸ் உறுப்பினர்களை அது விடுவித்து, காசா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அகற்ற எகிப்துடன் இஸ்ரேல் சேர்ந்து செயலாற்றாத வரையில், இஸ்ரேலுடனான தமது மோதல் வலுக்கவே செய்யும் என்று ஹமாஸ் கூறியிருந்தது.
தாம் தாக்குதலை நிறுத்தியிருந்த நிலையிலும் காசாவில் இருந்து ரொக்கெட்டுகள் வந்து விழுந்ததாக கூறிய இஸ்ரெல், பின்னர் மறுபடியும் காசா மீது குண்டுவீச்சை ஆரம்பித்தது.
கடந்த ஒருவார காலத்தில் இஸ்ரேலிய தாக்குதலில் பொதுமக்கள் பெரும்பான்மையாக பாலஸ்தீனர்கள் கிட்டத்தட்ட இருநூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Monday, July 14, 2014






                My Photo                          


 
           விசயமங்கலம் குணசீலன்
              99657 69746  -  99657 69746

கால்பந்து : ஜெர்மனி உலகச் சாம்பியன்


உலகக் கோப்பையுடன் ஜெர்மனி வீரர்கள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜெர்மனி வென்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது.
மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி, அர்ஜெண்டினாவை 1-0 எனும் கணக்கில் வென்று மிகவும் மதிப்பு வாய்ந்த இந்தக் கோப்பையையும், உலகப் பட்டத்தையும் வென்றது.
உலகக் கோப்பையை கைப்பற்றிய கோல் இதுதான்
ஆட்டத்தின், உபரி நேரத்தின் 23 ஆவது நிமிடத்தில், ஜெர்மனியின் கோயட்ஸ் ஒரு கோல் அடித்து, தமது அணி உலகக் பட்டத்தை பெற உதவினார்.
இந்த கோல் ஆட்டத்தின் 113 ஆவது நிமிடத்தில் வந்தது.
லியோனல் மெஸ்ஸி மிகவும் சிறப்பாக ஆடினாலும், ஜெர்மனியின் எதிர்த் தாக்குதலை அர்ஜெண்டினாவால் சமாளிக்க முடியவில்லை.
இந்த இறுதி ஆட்டத்தை கண்டுகளிக்க ஜெர்மனியின் அரச தலைவி ஏங்கலா மெர்க்கல் ரியோ டி ஜெனீரோவின் மேரக்கானா அரங்கத்துக்கு வந்திருந்தார்.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா முடிவுக்கு வந்துள்ளது.
அடுத்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.
இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக 171 கோல்கள் அடிக்கப்பட்டன.
சிறந்த கோல் கீப்பராக ஜெர்மனியின் மனுவேல் நோயரும். போட்டியின் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸியும் தேர்தெடுக்கப்பட்டனர்.
அதிக கோல் அடித்தவருக்கான தங்கக் காலணி விருதான 'கோல்டன் பூட்ஸ்' விருது கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸுக்கு வழங்கப்பட்டது.
தென் அமெரிக்காவில் ஒரு ஐரோப்பிய அணி, உலகக் கோப்பை போட்டியை வெல்வது இதுவே முதல் முறை


Monday, February 17, 2014