Wednesday, May 16, 2012

ஆ ராசா சிறையிலிருந்து விடுதலையானார் 2ஜி எனப்படும், இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார்.. ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, 20 லட்சம் ரூபாய் உத்தரவாதத் தொகையாக ராசா செலுத்த வேண்டும் என்றும், அதே அளவு தொகைக்கு மேலும் இருவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதன் மூலம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் கடைசியாக ஜாமீன் பெறும் நபர் ராசா என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் நீதிமன்ற உத்தரவு கிடைத்த்தும், அதுதொடர்பான நடைமுறைகள் நிறைவேற்றப்பட்டு, மாலை 7 மணியளவில் அவர் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கைது செய்யப்பட்ட ராசாவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. அவர், நீதிமன்ற அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டுக்குச் செல்லக் கூடாது. அதேபோல், தொலைத் தொடர்புத்துறை அலுவலகத்துக்கு செல்லக் கூடாது. சாட்சிகளைக் கலைப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது. அவர் தனது பாஸ்போர்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டுள்ள காலம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவரை தொடர்ந்து காவலில் வைத்திருப்பதும் எந்தப் பலனும் விளையப் போவதில்லை என்று கருதி அவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதி சைனி தனது உத்தரவில் தெரிவித்தார். ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் சாட்சகளைக் கலைத்துவிடுவார் என்ற சிபிஐ வாதத்தை நீதிபதி நிராகரித்துவிட்டார். ராசாவுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த விடயங்களை நீதிமன்றம் கவனத்தில் கொண்டிருப்பாக நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், ஏறத்தாழ எல்லா சாட்சிகள் மற்றும் ஆவணங்களும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளன என்றும் நீதிபது தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். ராசாவுக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதி அறிவித்தவுடன், நீதிமன்றத்தில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள், ஆரவாரமாகக் கூச்சலிட்டார்கள். திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ராசாவை வாழ்த்தி நீதிமன்ற வளாகத்தில் கோஷமிட்டார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 13 பேருக்கு ஜாமீன் வழங்கப்படும் வரை காத்திருந்த ராசா, கடந்த வாரம்தான் தனது ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சித்தார்த பெஹூராவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், அரசு ஊழியரையும் மற்றவர்களையும் தனித்தனியாக வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்பதை ராசா தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கினால், விசாரணை பாதிக்கப்படும் என்றும், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது ராசா மீதான குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது என்றும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ராசாவும் இன்னும் சிலரும், தங்கள் கண்காணிப்பில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருப்பது புதிய விசாரணையில்தான் தெரியவந்ததாகவும் அதுபற்றி மேலும் விசாரிக்க வேண்டியிருக்கிறது என்றும் சிபிஐ தெரிவித்தது. இதனிடையே, ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது வழக்கு விசாரணையை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார். அதே நேரத்தில், ராசாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
புனிதப் பயணத்துக்கான தமிழக அரசின் மானியம் சரியா? தமிழகத்திலிருந்து இந்துக்கள் சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகியத் திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு பயணச் செலவில் ஒரு பகுதி மானியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தாங்கள் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலேயே தமிழக அரசு இந்த மானிய உதவியை வழங்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த அரசு மானியம், மானசரோவர் புனித யாத்திரைக்குச் செல்ல இந்திய வெளியுறவுத் துறையால் தேர்வு செய்யப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 250 இந்துக்களுக்கும், முக்திநாத் யாத்திரை மேற்கொள்ளும் 250 இந்துக்களுக்கும் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மானசரோவர் புனிதப் பயணத்துக்கு ஒரு நபருக்கு ஆகும் மொத்த செல்வான ஒரு லட்சம் ரூபாயில் 40,000 ரூபாயும், முக்திநாத் புனிதப் பயணத்துக்கு ஒரு நபருக்கு ஆகும் செலவான 25,000 ரூபாயில், 10,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜெரூசலத்துக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த 500 கிறிஸ்துவர்களுக்கும் இது போன்ற மானியம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு பயணக்கட்டண சலுகை வழங்கப்படுவது படிப்படியாக குறைக்கப்பட்டு பத்தாண்டுகளில் நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள நிலையில், தமிழக அரசின் இன்றைய அறிவிப்பு சரியானது அல்ல என்று இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், இந்திய அரசின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞருமான சி எஸ் வைத்தியநாதன் தெரிவித்தார்.

Friday, January 20, 2012

திவால் நிலையில் பிரபல கொடாக் நிறுவனம்கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 ஜனவரி, 2012 - 16:21 ஜிஎம்டி
Facebook Twitter பகிர்கநண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக
ஜார்ஜ் ஈஸ்ட்மேன்(இடது) மற்றும் தாமஸ் ஆல்வா எடிசன்
அமெரிக்காவின் பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான கொடாக் திவாலாவதிலிருந்து சட்டரீதியான பாதுகாப்பை கோரியுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே, கையில் பிடித்து புகைப்படும் எடுக்கும் கருவியை பெருவாரியான மக்களிடம் எடுத்துச் சென்ற பெருமை கொடாக் நிறுவனத்துக்கு உண்டு. ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்ப மாறுதலை அணைத்துக்கொள்வதில் அந்த நிறுவனம் மிகத் தாமதமாக செயல்பட்டது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1880 ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் அவர்களால் கொடாக் நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, இருபதாம் நூற்றாண்டில் மிகவும் அறியப்பட்ட வர்த்தகப் பெயர்களில் ஒன்றாக அது திகழ்ந்தது.

கொடாக் தருணங்கள் என்று கூறப்பட்ட பல லட்சம் குடும்ப புகைப்படங்கள் உட்பட பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் கொடாக் கேமராவில் எடுக்கப்பட்டுள்ளன.

மனிதன் நிலவில் முதலில் கால்பதித்த தருணத்தை பதிவு செய்ய நீல் ஆம்ஸ்ட்ராங் கொடாக் கேமராவைத்தான் பயன்படுத்தினார். 1892 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கொடாக் எனும் நிறுவனம் உருவான பிறகு 1970 கள் வரை அமெரிக்க புகைப்பட சந்தையில் 90 சதவீதம் அந்த நிறுவனத்திடம் இருந்தது.

ஆனால் உலகளவில் புகைப்பட தொழில்நுட்பம் டிஜிட்டலுக்கு மாறிய பிறகு, அந்த மாற்றத்தை மிக மெதுவாகத்தான் கொடாக் ஏற்றுக் கொண்டது, அதுவேஅதன் வீழ்சிக்கு வித்திட்டது.

வீழ்ச்சிக்கு காரணம்

கடந்த 15 ஆண்டுகளில் கொடக் நிறுவனத்தின் மதிப்பு 35 பில்லியன் டாலர்களிலிருந்து 150 மில்லியன் டாலர்களுக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்தது.

நிர்வாகத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை கொடாக் எடுத்துவரும் வேளையில், நிறுவனம் நிலைகுலையாமல் இருக்கும் நோக்கில் ஒரு பில்லியன் டாலர்கள் கடனை கொடாக் திரட்டியுள்ளது.

மேலும் தம்மிடமுள்ள காப்புரிமைகளை விற்று போதுமான அளவுக்கு நிதியை திரட்டி கொடாக் நிறுவனத்தை பிழைக்க வைக்க முடியும் என்று அதன் உயரதிகாரிகள் நம்புகிறார்கள்.

அண்மைய காலங்களில் தம்மிடமுள்ள காப்புரிமையின் மூலம் பயனடையும் செயல்பாடுகளிலும் கொடாக் இறங்கியது. அது தொடர்பில் ஆப்பிள், எச் டி சி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மீது வழக்கும் தொடுத்தது.

தற்போது திவாலாவதிலிருந்து தமக்கு பாதுகாப்பு கிடைக்குமானால், 2013 ஆம் ஆண்டுக்குள், நிதிநெருக்கடியில் இருந்து மீண்டு தனது தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என கொடாக் நம்புகிறது.

ஏற்கனவே சிட்டிகுரூப் நிறுவனத்திடமிருந்து 950 மில்லியன் டாலர்கள் கடனை கொடாக் ஏற்பாடு செய்துள்ளது.

தனது இலாபங்கள் வீழ்ச்சியடைவதை தடுக்கும் நோக்கில், கடந்த சில காலமாக கேமரா தொழிலிலிருந்து கொடாக் விலகி, கம்ப்யூட்டர் பிரிண்டர்களில் கவனம் செலுத்தியது.

பங்குச் சந்தையிலும் சிக்கல்


இந்த மாதத்தில் முற்பகுதியில் கொடாக் நிறுவனத்தின் பங்குகள் குறைந்தது ஒரு டாலருக்கு மேலான நிலையை எட்டாவிட்டால், அந்த நிறுவனத்தின் பங்குகள் தமது சந்தையிலிருந்து அகற்றப்படும் என்று நியூயார்க் பங்குச் சந்தை அறிவித்திருந்தது.

1980 களில் கொடாக் நிறுவனம் உச்சத்தில் இருந்த போது உலகளவில் அதில் 1,45,000 பேர் பணியில் இருந்தார்கள். ஆனால் தற்போது அதில் 19,000 ஊழியர்களே இருக்கும் நிலையில், அவர்களின் பலர் இந்த திவால் நிலையினால் வேலை இழக்க நேரிடும்.

உலகளவில் இருபதாம் நூற்றாண்டில் அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நினைவுகளை பாதுகாத்து வைத்ததில் கொடாக்குக்கு ஒரு பங்கு உள்ளது, ஏனென்றால் அந்த நிறுவனத்திடம்தான் அந்தப் பணி பெரும்பாலானவர்களால் ஒப்படைக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டுகிறார் டொடரண்டோவிலுள்ள ரயர்ஸன் பல்கலைகழகத்தில் புகைப்படத்துறை பேராசிரியராக இருக்கும் ராபர் பர்லி.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள காணிகளை நிர்வகிப்பதற்காக இராணுவ அதிகாரிகள் கொண்ட குழுக்களை நியமிப்பதற்கு ஏதுவாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இலங்கை அரசாங்கம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையை கண்டித்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருந்த நிலையிலேயே, தாங்கள் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு விடயத்தைக் கொண்டுவந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


'வடக்கு கிழக்கு காணி சுற்றறிக்கை வாபஸ்':சுமந்திரன்

வடக்கு கிழக்கு காணி தொடர்பான சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
தொடர்புடைய விடயங்கள்மீள்குடியேற்றம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள காணிகளை மீண்டும் பதிவுசெய்யுமாறு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டு, காலக்கெடுவும் விதித்திருந்த குறித்த சுற்றறிக்கை சட்ட முரணானது என்பதை சட்டமா அதிபரும் காணி அமைச்சும் உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் சுற்றறிக்கையை மீளப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்த சட்டமாஅதிபர், புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட இருப்பதாக கூறியுள்ளார்.

புதிய சுற்றறிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா என்பதை உறுதிப்படுத்திவிட்டே அதனை வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்திருப்பதாக சுமந்திரன் கூறினார்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் தலையீட்டுடன் நடந்துவருகின்ற குடியேற்றங்களுக்கு சட்டவடிவம் கொடுக்கவே அரசாங்கம் இந்த சுற்றறிக்கையை பயன்படுத்த முயற்சித்தது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.